Subscribe:

Pages

Saturday, July 23, 2011

இலவசப் பிரணவம்: தந்தைக்கு உபதேசம் செய்த மகன்

இலவசப் பிரணவ உபதேசம்
இலவசத்தால் வந்த இலவச ஞானம்: தந்தைக்கு உபதேசம் செய்த மகன்


காரைக்குடியில்ருந்து டாக்டர் செல்வம், தனக்கு யாரோ அனுப்பி வைத்திருந்த இலவசங்கள் பற்றிய "நறுக்"கை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.





Nalla ilavasam



ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த இயல்பான உரையாடல் இது. இதில் இடம்பெற்றுள்ள சில வாசகங்கள் தமிழகத்திலே நடைமுறை சொல்வழக்கிலே ஏற்பட்டுள்ள பிறழ்வுகளுக்குச் சான்று. அதைவிடுத்து இவ்வுரையாடலின் சாரத்தினை மட்டும் காண்க.

ஒட்டுவேட்டையை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்காக அரசியல் கட்சிகள் தரும் இலவசங்கள், மக்களின் - குறிப்பாக வளரும் இளைய சமுதாயத்தின் சிந்தனையை - எத்தனை அளவு எதிர்த்திசையில் கொண்டு சென்றிருக்கிறது என்பதனை இந்த உரையாடல் காட்டுகிறது.

ஏற்கனவே நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப் பெருத்த சவுக்கடியாய் எழும்பி நிற்கும் இலவசங்கள், மக்களின் சிந்தனைச் செல்வம் எனும் மனிதவள ஆதாரத்தையும் வேரோடு சாய்க்கும் கொடூரத்தைக் காண்கிறோம்.

மக்களை ஏமாற்றும் - பாதிக்கும் திட்டங்களை அரசியல் கட்சிகள் நடைமுறைப் படுத்தும்போது அவற்றைத் தடுத்து மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடைமையல்லவா?

மனித குலத்தின் வளர்ச்சிக்கும், நலனுக்கும் எதிரிடையான திட்டங்களை அரசியல்வாதிகள் முன்வைக்கின்றபோதும், நடைமுறைப்படுத்தும்போதும், அவற்றை எதிர்ப்பதும், புறக்கணிப்பதும், மக்கள் பிரதிநிதிகளின், பெரியவர்களின், இளைய தமிழகத்தின், கடைமையல்லவா?


கடமை மறந்து - காட்சிகளில் தொலைந்து, மக்கள் பாராமுகமாய் இருப்பதுவும், இப்போக்கை வெகு சாதகமாய்ப் பயன்படுத்திக் கொண்டு, அரசியல் கட்சிகள் தழைத்தோங்குவதும், தமிழகத்தின் எதிர்காலம் சிறப்பாக இல்லை என்பதைக்
காட்டுகின்றன என்று சொல்லவும் வேண்டுமோ?

0 comments:

Post a Comment