Subscribe:

Pages

Thursday, June 30, 2011

கோடியில் ஒருத்தி: வலம்புரிச் சங்கு

கோடியில் ஒருத்தி: வலம்புரிச் சங்கு  




 
பாம்புகள் சுருண்டு கொள்வது வலம்புரியாகவா அல்லது இடம்புரியாகவா எனப் பார்த்தோம். பெண் பாம்புகளே பெரும்பாலும் வலம்புரியாகச்  சுருண்டு கொள்ளும் என்பதை அறிந்தோம்.

சங்குகளில் வலம்புரிச் சங்கு  பிரசித்தி பெற்றது. இந்தியா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும், சொல்லப்போனால் உலகின் பெரும்பாலான பிரதேசங்களிலும் காணப்படுகின்ற சங்குகள் இடம்புரியாகவேப் பிறக்கின்றன. இவற்றில் கோடியில் ஒன்றாகத் தப்பிப்  பிறப்பவை  வலம்புரிச் சங்குகள்.  வலம்புரிச் சங்கு பெண்பால் வகை என்று நம்பப்படுகிறது.

எனவே இந்த அதிசயப் பிறவிகளுக்கு, மிகுந்த மதிப்பு அளிக்கப்பட்டு, தெய்வ வழிபாடு உள்ளிட்டப் புனித காரியங்களுக்காக வலம்புரிச்  சங்கு பயன்படுத்தப் படுகிறது. 

போலிகள் ஜாக்கிரதை

அசலான வலம்புரிச்  சங்குகளின் விலை இருபத்தைந்தாயிரம் ரூபாய் முதல் ஒன்றரை லட்சம் ரூபாய் வரை  போகிறது. இந்நிலையில், ஆப்பிரிக்கக் கடல் பகுதிகளில்  காணப்படும் ஒருவகை  மட்டச் சிப்பிகள் வலம்புரியாக, சந்கையொத்தத் தோற்றத்துடன் பெரிய அளவில் காணப்படுகின்றன. இவற்றைச் சேகரித்து வந்து வலம்புரிச் சங்குகள்  என விற்று விடுகிறார்கள்.   




0 comments:

Post a Comment