Subscribe:

Pages

Friday, July 8, 2011

பாம்பிற்கு விஷத்தை உருவாக்கியவர்கள் மனிதர்களே!

பாம்பிற்கு விஷத்தை உருவாக்கியவர்கள் மனிதர்களே!



 

நூறு மிலியன் ஆண்டுகளுக்கு முன்பே  பாம்புகள், புவியில் தோன்றி இருந்ததைக் காட்ட ஆதாரங்கள் உள்ளன எனப் பார்த்தோம். தொடக்கத்தில் பாம்புகள் யாவும் விஷம் இல்லாத ஜந்துக்களாகவே இருந்தன.

தாம் தோன்றி நாற்பது மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகே பாம்புகள் விஷத்தை உருவாக்கிக் கொண்டன.
காரணம்?

பாம்பிற்குப் பிறகு தோன்றிய மனிதனுக்கு இயற்கையாகவே பாம்பைக் கண்டால் பயம் ஏற்பட்டுப் போனது. எனவே பாம்புகளைக் கண்ட மாத்திரத்தில் அடித்துக் கொன்றான்.  இவ்வாறு அவன் அடித்துக் கொன்ற பாம்புகள் ஏராளம்! தாராளம்!!


இந்நிலையில் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள வேறு வழியில்லாத காரணத்தால் பாம்புகள்  தமக்குள்  நச்சுப் பையையும், நச்சுப் பல்லையும், கடித்தால் கடிக்கப்பட்டவர்கள் சாகுமாறு செய்யும் கடுமையான வீரிய நஞ்சான சயனைடையும் உருவாக்கிகொண்டன. பாம்புகளின் பரிணாம வளர்ச்சியிலே இது ஒரு முக்கியமான மைல் கல் எனலாம்.

ஆனால் எல்லா பாம்புகளுமே நஞ்சை உண்டாக்கிக் கொள்ளவில்லை. இன்று உலகில் மொத்தம்  3000 பாம்பு வகைகள் உள்ளன. இவற்றுள் 375 வகைப் பாம்புகள் மட்டுமே விஷப் பாம்புகள்!!

இவ்வாறு பாம்புகள் நஞ்சை வளர்த்துக் கொண்டது இன்றிலிருந்து 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தான்.

முதல்  40 மில்லியன் ஆண்டுகள் எல்லாப் பாம்புகளும் விஷமின்றியே "நல்ல" பாம்புகளாக மட்டுமே இருந்தன

0 comments:

Post a Comment