Subscribe:

Pages

Friday, July 29, 2011

அப்பா அம்மாவுக்கு மொட்டை மாடி!!

அப்பா அம்மாவுக்கு மொட்டைமாடி!!



புதுமனைப் புகு விழா - கோலாகலமாக நடந்தேறிக்கொண்டிருந்தது.

என் அலுவலகத் தோழி. வேளச்சேரியிலே, கீழ் வீடு - முதல்தளம் மொட்டைமாடியென வெகு நேர்த்தியாக சகலவசதிகளும் கொண்ட பங்களா. சுற்றிலும் அழகுச்செடிகள், முன்புறம் புல்தரை, பின்புறம் தோட்டம் என மிகப் பிரம்மாண்டமான கட்டிட அமைப்பு.

கணவன் - மனைவி இருவருமே கைநிறைய சம்பாதிப்பவர்கள். கூடுதலாகப் பெற்றோர்கள் வேறு இருபுறமும் தாங்கு தாங்கு என்று தாங்குபவர்கள். பிக்கல் பிடுங்கல் இல்லாததால் விரைவான வளர்ச்சி -- முன்னேற்றமென அவர்கள் செல்வச்செழிப்பு அமைந்தது. வெகுபலருக்கும் கிடைக்காத பாக்கியம் இது.

அவருக்கு நாற்பது' அவளுக்கு முப்பத்தி ஆறு - அழகு - படிப்பு - உத்தியோகம் - சம்பளம - அந்தஸ்து என - அனைத்து விஷயத்திலும் பொருத்தமான ஜோடி - எல்லாவற்றுக்கும் மேலாக கர்வமில்லாமல் பிறருடன் பழகும் எளிமை இருவருக்குமே இயல்பாக அமைந்திருந்தது ஆச்சரியமான பொருத்தம்.

என்னைக் கண்ட மாத்திரம், இருவரும் ஓடிவந்து வரவேற்றார்கள். வீட்டைச் சுற்றிப் பார்த்தபடி நடந்து வந்தோம். அவர்களது இரு மகன்களும் விளையாடிக் கொண்டிருந்தார்கள் - அருண் - ஜகன் யார் வந்திருக்காங்க பாரு என என் தோழி அழைக்க - இருவரும் ஓடிவந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டார்கள்.

வழக்கமான் குசல விசாரிப்புகளுக்குப் பிறகு - பெரியவன் கேட்டான்: "ஆண்டி! வீடு நல்லாயிருக்கா?" " சூப்பரா இருக்குப்பா" என்றேன். சிறியவன் சொன்னான்:
"அண்ணனுக்குக் கிரவுண்ட் ப்ளோர் - எனக்கு பர்ஸ்ட் ப்ளோர்."

அவன் இவ்வாறு சொன்ன மாத்திரம், "அப்பா அம்மாவுக்கு?" என்றேன்.
"மொட்டைமாடி" படக்கெனச் சொன்னான் சிறியவன்.

இரு குழந்தைகளுக்கு பத்தும் எட்டுமாக வயது - இவர்கள் பெரியவர்களாகும் போது - இவர்களைப் பெற்று வளர்த்த - பெரியவர்களின் நிலை என்ன என்பதனை எளிமையாய் எடுத்துக் கூறிவிட்டான் அந்த சிறுவன்!!

0 comments:

Post a Comment