Subscribe:

Pages

Monday, July 11, 2011

மொழிகள் பிறந்தது நமக்காக: ஃப்ரெஞ்ச் மொழி

மொழிகள் பிறந்தது நமக்காக: ஃப்ரெஞ்ச் மொழி



விக்ரமாதித்தன் (ஆதித்யா)



அந்நிய மொழிகளுள் பலவகையில் சிறப்பான மொழியாகத் திகழ்வது ஃப்ரெஞ்ச் மொழி. பாரம்பரியம் மிக்கதொரு பன்னாட்டு மொழியென்பதாலும், அன்று, காலனி அதிகாரத்தின் கீழ் பல வளமான நாடுகளை ஃப்ரான்ஸ், தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்து வைத்திருந்த காரணத்தினாலும், இன்றும்  ஃப்ரெஞ்ச் மொழி, பலநாடுகளின் பயன்பாட்டு மொழியாக விளங்கி வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறான நாடுகள் பலவற்றிலும் உயர்கல்வி,  வேலைவாய்ப்புக்கள், கலை-கலாச்சாரப் பரிமாற்றங்கள் எனப்பலவகையான வாய்ப்புக்கள் நமக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றன.  


ஆக பன்னாட்டு அளவில், பலவகைகளிலும் நமக்குக் கைகொடுக்கிற மொழி ஃப்ரெஞ்ச் மொழி. சொல்லப்போனால், உண்மையான பன்னாட்டு மொழிகள் இரண்டு மட்டுமே; ஒன்று ஆங்கிலம் மற்றொன்று ஃப்ரெஞ்ச். இம்மொழிக்குள்ள இன்னுமொரு சிறப்பம்சம் என்னவென்றால் ஆங்கில மொழியில் பயன்படுத்தப்படும் சொற்களில் 12% சொற்கள்,  ஃப்ரெஞ்ச் மொழியிலிருந்து பெறப்பட்டிருப்பவையேயாகும்.

எனவே, திரைகடலோடியும் திரவியம் தேடு என்கிற பொன்மொழியைப்பின்பற்றி வெற்றி மீது வெற்றி காண விழைபவர்களுக்கு, ஃப்ரெஞ்ச் மொழி ஒரு வரப்பிரசாதமாகும். இம்மொழி அறிந்தால், உள் நாட்டிலும் கூட நிறைய சம்பாதிக்கலாம்!

ஃப்ரெஞ்ச் மொழிக்குப் பல தனிச்சிறப்புக்கள் உள்ளன:

(1) ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக, ஐந்து துணைக்கண்டங்களில் பயன்படுத்தப்படும் மொழி இது.

(2) ரோமானியப் பாரம்பரியத்தில் உதித்த இம்மொழி உலகில் மிகப்பரவலாகப் பேசப்படுகின்ற  - பயன்படுத்தப்படுகின்ற மொழியாக விளங்குகின்றது: தாய் மொழியாக 110 மில்லியன் பேரும்; இரண்டாவது மொழியாக 190 மில்லியன் பேரும்; அந்நியமொழியென்ற நிலையில் 200 மில்லியன் பேரும் பேசுகின்ற மொழி இது.

(3) உலக மொழிகளின் முன்னணி வரிசையில்,  ஃப்ரெஞ்ச்  மொழி எத்தனையாவது இடம் வகிக்கிறது எனப்பார்த்தால் - தாய்மொழியாகப்பேசப்படும் நிலையில் 14ஆவது இடத்தையும், தாய்மொழியல்லாத நிலையில்  4ஆவது இடத்தையும் இது பெற்றுள்ளது.

(4) உலக அளவில், கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படும் மொழிகளில் ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக, இரண்டாம் இடத்தில் இருக்கும் மொழி ஃப்ரெஞ்ச் மொழியாகும்.

(5) ஐரோப்பா, வடஅமெரிக்கா, தென்மெரிக்கா, ஆசியா, ஒஷானியா உள்ளிட்டப் பிரதேசங்களைச் சேர்ந்த 57 நாடுகளில் பேசப்பட்டு, 28 நாடுகளில் ஆட்சி மொழியாக விளங்கும் உயர் சிறப்புகொண்ட மொழி இது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமல்ல: ஐநாசார் நிறுவனங்கள் உள்ளிட்ட, பல பன்னாட்டு நிறுவனங்களில் அதிகாரப்பூர்வ வழக்குமொழியாகவும் இம்மொழி விள்ங்குகின்றது.

(6) அறிவியல் தொழில்நுட்ப உலகில் மிகவும் பரவலாகப்பயன்படும் மொழி ஃப்ரெஞ்ச் மொழியாகும்.

ஃப்ரெஞ்ச் வழக்கு மொழியாக உள்ள பன்னாட்டு நிறுவனங்கள்   
· United Nations   
· UNESCO   
· NATO   
· Organization for Economic Cooperation and Development (OECD)   
· the International Labor Bureau   
· the International Olympic Committee   
· the 31-member Council of Europe   
· the European Community   
· the Universal Postal Union   
· the International Red Cross   
· Union of International Associations (UIA)   
· the European Court of Justice   
· the European Tribunal of First Instance   
· the Press Room at the European Commission in Brussels, Belgium   

ஃப்ரெஞ்ச் பேசப்படும்  நாடுகள்    
· பெனின்   
· பர்கின்   
· புருண்டை   
· காமிரூன்   
· மத்திய ஆஃப்ரிக்க குடியரசு   
· சாட்    
·காமோரோஸ்   
· காங்கோ    
· கோட்டீ டி ஐவயிர்   
· காங்கோ குடியரசு   
· டிபௌடி   
· மத்தியரேகை கினியா   
· கபோன்            
· கினியா   
· மடகாஸ்கர்   
· மாலி   
· நைஜர்   
· செனெகல்   
· சேஷெல்லெஸ்   
· டோகோ   
· அல்ஜீரியா   
· மௌரிடானியா   
· மொரோகோ   
· டுனிசியா   

நிறைய வேலைவாய்ப்புக்கள்
உலகின் மிகவேகமான ரயில்  ஒடுவதும். உலகின் மூன்றாவது இராணுவ வல்லரசாகத் திகழ்வதும், ஸ்மார்ட் அட்டையை முதன் முதலில் அமுல்படுத்திய நாடு எனவும், விமானங்கள் ஹெலிகாப்டர்கள் ஆகியனவற்றை ஏற்றுமதி செய்வதில் உலகில் இரண்டாவது இடம்பெற்ற நாடு என்பதாகவும் பல சிறப்புக்களைப் பெற்றிருப்பது  ஃப்ரான்ஸ். அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள், இராணுவத்துறை, கட்டுமானப்பொறியியல், விவசாயத்துறை, எரிசக்தி-ஆற்றல் வளத்துறை, அணுசக்தித்துறை, பொருளாதாரம், விண்வெளித்துறை, போக்குவரத்துத்துறை, எலெக்ட்ரானிக் துறை, வாணிகத்துறை, ஏற்றுமதித்துறை ஆகியனவற்றிலும் ஃப்ரான்ஸ் முன்னோடியாக விளங்குகின்றது.

இவ்வனைத்துத்துறைகளிலும், உயர் கல்வி, ஆயுவுப்படிப்புகள், மற்றும் வேலைவாய்ப்புக்கள் ஆகியவற்றிற்கு ஃப்ரெஞ்ச் மொழி இன்றியமையாததாகும்.

ஃப்ரான்ஸ் மட்டுமல்லாது, ஃப்ரெஞ்ச் மொழி பேசும் அனைத்து நாடுகளிலும் இத்துறைகளுக்கான அலுவலகங்கள் மற்றும் ஆய்வுக்கூடங்கள் உள்ளதால், இவற்றில் வேலைவாய்ப்பு பெற ஃப்ரெஞ்ச் மொழி ஒரு அவசியத்தேவையாகும்.
  
எடுத்துக்காட்டாக - அமெரிக்க அரசில் 92 பணிகளுக்கு ஃப்ரெஞ்ச் மொழி கட்டாயத்தேவையாக இருக்கின்றது; 11 பணிகளுக்கு ஏதாவது ஒரு ஐநா மொழி தேவையாக உள்ளது; ஃப்ரெஞ்ச் மொழி ஒரு ஐநா மொழியன்றோ? எனவே ஃப்ரெஞ்ச் கற்றவர்கள் இப்பதவிகளுக்கெல்லாம் தகுதியானவர்களாகிறார்கள்.

இதுமட்டுமல்ல - பன்னாட்டு அளவில் தூதரக அதிகாரிகள் போன்ற உயர்பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ஃப்ரெஞ்ச் மொழி அறிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படை.

ஃப்ரெஞ் மொழி அறிந்தால் நம் நாட்டில் இருந்தபடியேயும் நிறைய சம்பாதிக்க முடியும். ஃப்ரெஞ்ச் மொழி கற்பதற்கு டிமாண்ட் அதிகரித்துக்கொண்டே போவதால், ஃப்ரெஞ்ச் மொழி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள் மிக அதிக எண்ணிக்கையில் தேவைப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரி/பல்கலைக்கழகங்களில் ஃப்ரெஞ்ச் மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதோடு, டியூஷன் வகையிலும் அதிகமான தேவை அதிகரித்துள்ளது. 

மேலும் பல பன்னாட்டு நிறுவனங்கள் தமது அலுவலகங்கள், ஆய்வகங்கள், மற்றும் தொழிற்கூடங்களை இந்தியாவில் நிறுவியுள்ளன  - மேலும் பல நிறுவப்படும். இவற்றில் வேலை வாய்ப்பு பெற ஃப்ரெஞ்ச் மொழி அறிந்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

அறிவியல் தொழில் நுட்பத்துறையில் முன்னோடி ஆய்வுக்கட்டுரைகள் ஃப்ரெஞ்ச் மொழியில் வெளியிடப்படுகின்றன. இவற்றைப் படித்தறிய ஃப்ரெஞ்ச் மொழி ஆற்றல் அவசியமாகும். இவ்வகையில், நம் அறிவியல் மாணவர்களுக்கும், ஆய்வு மாணவர்களுக்கும் ஃப்ரெஞ்ச் மொழி கற்றல் அவசியமாகிறது.  ஃப்ரெஞ்ச் மொழியில் வெளிவரும் ஆய்வுக்கட்டுரைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத்தரக்கோரும் நபர்களும் ஏராளம். ஃப்ரெஞ்ச் மொழிப்புலமையிருப்பவர்கள்  மொழிபெயர்ப்பின் மூலம் கைநிறைய சம்பாதிக்க முடியும்.

சிரத்தையுடன் கற்றால் மிகவும் எளிது

26 லத்தீன் எழுத்துக்களால் (Alphabets) எழுதப்படும் ஃப்ரெஞ்ச் மொழிக்கு மொத்தம் 16 உயிர் எழுத்துக்கள் (Vowels)  மற்றும் ஐந்து சித்திரக்குறிகள் (Diacritical marks)தேவைப்படுகின்றன. உச்சரிப்புமுறையில் சிலசிறப்பு விதிகளைப்பின்பற்ற வேண்டும். தேர்ந்த ஆசிரியரின் கீழ் சிரத்தையுடன் கற்றால் மிகவும் குறுகிய காலத்திலேயே இம்மொழியில் தேர்ச்சியும் புலமையும் பெறலாம்.

எங்கு கற்கலாம்?
ஃப்ரெஞ் தூதரகத்தின் சார்பில் இயங்கும் அதிகாரப்பூர்வ ஃப்ரெஞ்ச்மொழிப் பயிற்சி நிறுவனம்
Alliance Francaise of Madras (AF) ஆகும். சென்னையில் பல்லாண்டுகளாக நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் இயங்கி வரும் AF, சமீபத்தில் அடையாரிலும் ஒரு கிளையைத்தொடங்கி யுள்ளது. கோயம்பத்தூர், மதுரை, திருச்சி ஆகிய ஊர்களிலும் தலா ஒரு  பயிற்சி நிறுவனங்கள் இயங்கிவருகின்றன. இவற்றின் முகவரி மற்றும் தொடர்பு விவரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


Alliance Francaise of Madras (Main)
New No.24, College Road
Chennai 600 006
Tel: 91 44 28279803/ 28271477
Fax: 91 44 28251165
contact.afmadras@gmail.com


Adyar Branch
Incharge : Ms. Suchitra Ravi
Cell: 99401 62773
contact.afmadras@gmail.com

Coimbatore
Incharge : Ms. Merlin Sarah Simon
PSG Institute of Management
P.B.No. 1668, Avinashi Road
Coimbatore 641 004
Tel: 98432 43702.
afmadras_cbe@hotmail.com


Madurai
Incharge : Mr.Milton Powers
The American college
Tallukalam P.O.
Madurai 625 002
Tel : 98421 09298
miltonpowers@voila.fr

Trichy
Incharge : Mrs. Jayanthi Vijayan
Ammai Appan Nagar, Door No.2,
6th Cross, Vayalur Road
Trichy 620 017
Tel: 98429 13566
janyanthi_gnany@yahoo.co.in

இவை தவிர நிறைய தனியார் ஃப்ரெஞ்ச் பள்ளிகள் சென்னையிலும் இன்னபிற நகரங்களிலும்  உள்ளன. இவற்றின் முகவரி மற்றும் விவரங்கள் அறிய  கீழ்க்கண்ட இணயதள முகவரிகள் உதவும்:
www.language-school-teachers.com
www.chennai.vivastreet.co.in

விக்ரமாதித்தன் (ஆதித்யா)




0 comments:

Post a Comment