Subscribe:

Pages

Thursday, July 21, 2011

ஓரமாய் ஒதுங்கிப் போனவளை சாவு கிராக்கி என்று வைவதா?

சென்ற வாரம் சென்னை அண்ணா நகர் மேற்குப் பகுதியின் முக்கிய மையமான திருமங்கலம் சந்திப்பில் பேருந்திலிருந்து இறங்கி, சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி, பாதசாரிகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைவாகான நடைபாதை மீது மிகுந்த பொறுப்புணர்ச்சியுடன் மிகக் கவனமாகக் கால்பதித்து நடந்து சென்று கொண்டிருந்தேன் என் சகோதரியின் வீட்டை நோக்கி.

எனக்குப் பின் புறம் ஹாரன் சத்தம். திரும்பி பார்த்தேன். மோட்டார்பைக்கில் நடுத்தரவயது மனிதர். நடைபாதை மீது பைக்கில் வருவதா என ஒரு கணம் அதிர்ச்சி யடைந்தாலும் - என்னை அறிந்த எவரோ ஒருவர், என்னை வெகு தூரத்தில் கண்ட மாத்திரம் என்னைப் பிடிக்க வேண்டும் - சந்திக்க வேண்டும் என என் பின்னே விரைந்து வந்திருப்பாரோ என எண்ணினேன்- புன்னகையுடன் அவரது முகத்தை நேருக்கு நேர பார்த்த படி ஒரு கணம் நின்றேன்.

"ஏ வழிய உட்டு நகரு! சாவு கிராக்கி!! என்னா என்னைப் பார்த்து லுக் உட்ற?"

என்று இளக்காரமாக உறுமி மிரட்டி விட்டு, பைக்கை விரைத்து என்னை ஒரு இடித்துத் தள்ளியபடி சீறிப் பறந்தார் அவர்.



சரி -

இங்கு யார் வழியில் யார் குறுக்கிட்டார்?
சாவு கிராக்கி யார்?
லுக் விடுவது என்றால் என்ன?

ஒரு விடலையோ அல்லது இரத்த வீரியம் நிறைந்த ஒரு வாலிபனோ இதனைச் செய்திருந்தால் மனம் ஓரளவேனும் ஏற்றுக் கொண்டிருக்கும்- "தெரியாத்தனம் - வயதுக் கோளாறு" என்று.

ஆனால், நாற்பதைக் கடந்த நடுத்தர வயதுடைய ஒரு நபர், சாலை விதிகள் மற்றும் மோட்டார் வாகனச் சட்டங்களைப் புறக்கணித்து - அவமதித்து, தான் தவறு செய்து கொண்டிருக்கிற நிலையில், சாலை விதிகளை மதித்து, நடை பாதையின் மீது ஓரமாய் ஒதுங்கிப் போய்க் கொண்டிருக்கிற - நடை உடை பாவனைகள் மற்றும் தோற்றம் , மொழி ஆகியனவற்றில் கண்ணியத்தையும், கவுரவத்தையும் ஏந்திச் செல்லும் ஒரு முதிர்ச்சி பெற்ற பெண்மணியை இவ்வாறு பேசியிருக்கிறார் என்றால் இது ஒரு சாம்பிள்!

தமிழகத்தில் நடைமுறை சொல்வழக்குகள் பிறழ்ந்து வருகின்றன - பெண்களை மதிப்புடன் நடத்தவேண்டும் என்கிற பாரத தர்மமும், தமிழ்ப் பண்பாடும் மறைந்து வருகின்றன என்பதை இந்த நிகழ்வு எடுத்துக் காட்டுவதாகவே தோன்றுகின்றது

0 comments:

Post a Comment