Subscribe:

Pages

Saturday, November 12, 2011

ஸ்டீவ் ஜாப்பும் கிருஷ்ணன் கோயில் பிரசாதமும்

நன்றி  (படங்களுக்காக): mobiletopsoft.com; hindugod-photos.blogspot.com
 
ஸ்டீவ்  ஜாப்பும் கிருஷ்ணன் கோயில் பிரசாதமும்!!
வாழ்வின்  இன்னல்களை இயல்பாகச் சந்திக்கப் பழகிக்கொள்பவர்கள் வெற்றிப் பாதையில்  நுழைவது  நிச்சயம் என்பதை நிருபிக்கும் இன்னொரு எடுத்துக் காட்டு  ஸ்டீவ் ஜாப்!!
ஒசத்தியான "ரீட் கல்லூரி" யில் சேர்ந்த பின்பு தெரிகிறது எத்தனைச் செலவு என்று!! போதாக்குறைக்கு பிடிக்காத பாடங்கள் வேறு!
இவை இரண்டிலுமிருந்து விடைபெற வேணுமானால் கல்லூரியிலிருந்து விலகுவது ஒன்று தான் வழி என்று புலப்படுகிறது! அவ்வாறே செய்கிறார்!!
ஆனால்  - தங்க இடமில்லை,  உணவில்லை என்ன  செய்வது?
நண்பர்களின் அறையில் தரையில் படுத்துக் கொள்கிறார்! 
கோக் புட்டிகளைச் சேகரித்துச் சமர்ப்பித்து, ஐந்து சென்ட் டோக்கன்களைப் பெற்று சில நொறுக்குத் தீனிகளை வாங்கிக்கொள்கிறார்!! மற்றபடி உணவென்பதில்லை!!
வயிறு "கவாங்"  செய்ய - சாப்பாட்டுக்கு என்ன  செய்யல்லாம் என  எண்ணமிடும்போது இந்துக்  கோயில்களில் உணவு வழங்கும் பழக்கம் உண்டு என்பதை அறிந்து கொள்கிறார். ஏழு மைல் தொலைவில், ஹரே கிருஷ்ணா இயக்கத்தினரின் கிருஷ்ணன கோயில் இருப்பதையும்  அறிந்து கொள்கிறார்.
 
அந்த  கிருஷ்ணன் கோயிலுக்கு நடந்து சென்று  முழுச் சாப்பாடு சாப்பிடுகிறார்!! 
தினமும்  செல்ல முடியவில்லை என்றாலும் கட்டாயம் ஞாயிறு அன்று ஜாப் கிருஷ்ணன் கோயிலில் இருப்பார்!!
கிருஷ்ணன் கோயிலில் கிடைத்த முழுச் சாப்பாடு தான் அவரைத் தாக்குபிடிக்க வைத்திருக்கிறது!!

"அத்தனை ருசியான போஷாக்கான உணவை நான் அதற்கு முன் கண்டேனில்லை- உண்டேனில்லை!" என உளமாரப் பாராட்டிஇருக்கிறார் ஜாப். 
மதம் தாண்டிச் சென்று இந்துக் கோயில் அளித்த உணவில் தாம் வாழ்ந்த அந்த நாட்களைப் பற்றி ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகத்தில் தான் ஆற்றிய பட்டமளிப்பு விழாவிலும் அவர்  குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.     

"மண் திணி ஞாலத்து
         உண்டி கொடுத்தோர்
        உயிர் கொடுத்தோரே" 

என்ற  மணிமேகலையின் காதை வரிகளை ஜாப்பின் பேச்சில் காண்கிறோம்!!
வங்கக் கடல்  கடந்த மாதாவனே! கேசவனே! என நாம் கிருஷ்ணனை ஆராதிப்பதுண்டு!! இது எத்தனை உண்மை என்பதை ஜாப்பின் வாழ்வில் காண்கிறோம்!!

கடல் கடந்து சென்று அமெரிக்காவில் நின்று - அன்று உணவின்றி வாடிய ஜாப்புக்கு விருந்து வழங்கி - 
நமக்கு பாற்கடலில் கடைந்தெடுத்த அமுதமென ஒரு ஒப்பற்ற மனிதரை வழங்கிய கண்ணனை எவ்வாறு வாழ்த்துவது?
பாரதி  சொன்னானே --

"ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது"

அது போன்று - கண்ணன் ஈர்த்த வாஞ்சையினால்  தானோ என்னவோ, ஜாப் இந்தியா வந்து  -- ஆன்மிகம் தேடினார்?

"உள்ளம் கவர்  கள்வன்" என கண்ணனை மிகச் சரியாகத் தான் நாம் சித்தரிக்கிறோம்!!
"கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், ... 
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!
கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்!
கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே!"

பாரதியின்  இவ்வரிகள் ஜாப்பிற்குத் தெரிந்திருக்குமேயானால் இவற்றைக் கட்டாயம் தமது  உரையில் - எழுத்தில் அவர் கையாண்டிருப்பார் என்றே தோன்றுகிறது.

 




0 comments:

Post a Comment