Subscribe:

Pages

Wednesday, November 9, 2011

கால் கலை: கவிதை -- அவ்வைமகள்

கால் கலை: கவிதை -- அவ்வைமகள்




கால் தூக்கக் கால் விரித்து வாய்க்
கால் வழிகாட்டி விதைவாங்கி நாற்றங்
கால் பசுக்க வாய்மசக்கை கொண்டு
இருகால் கடுத்து சிசு வாசம் செய்ய
கால்பதம் புடைக்க எடை சுமந்து முற்றிக்
கால் முட்டிக் குடம் உடைய கட்டிற்
கால் விளிம்பில் கால்மடக்கி தொடைக்
கால் அகட்டிக் கால் விலக்கி பட்டுக்
கால் கண்டு பட்டப் பாடொழிந்து விட்டக்
காலதனில் மட்டத் தூளிகட்டி எட்டும்
கால் அசைவில் விழிகோர்த்துவைத்து முற்றக்
காலதரில் பிஞ்சுக் காலயர்ந்து மடிக்
காலிடுக்கில் பிள்ளை வீழ்ந்தசர மெத்துக்
கால்விரிப்பில் வெற்றுக் கால் விரித்து
கால் களைப்பாற கட்டை இளைப்பாற - அதே
கால் இடையில் மீண்டும் கால் பொருந்தும்
கால் களையே! இது கால் கலையே!!
கால் பலமும் வெறுங்கால் பதமும் முழங்
கால் திடமும், தொடைக்கால் தனமும் மடிக்
கால் வளமும் வாழ்க்கடகால் அமைக்கும் எனக்
கால் வழியே நல்ல சேதி கண்டேன்!!
கால் களைத்துக் கால் முளைக்கும் இக்
கால் வியப்பை நான் என்னவென்பேன்? வெறுங்
கால் தானே என நான் எண்ணுவனோ? இனி
கால் மரபை நான் மறுப்பதுண்டோ!

0 comments:

Post a Comment