Subscribe:

Pages

Sunday, November 13, 2011

ஊடகத் தமிழ்: மொழி வழக்கு -- தொல்காப்பியம் கூறும் பத்து குற்றங்கள்


ஊடகத் தமிழ்: மொழி வழக்கு -- தொல்காப்பியம் கூறும்  பத்து குற்றங்கள் 



தொல்காப்பியத்தில் பொருளதிகாரம் - மரபியல் - நூற்பா 109, கீழ்க்காணும் பத்தும் மொழிவழக்கில் "குற்றங்கள்"   என்கிறது.

"சிதைவு எனப்படுவவை வசை அற நாடின்

கூறியது கூறல், மாறுகொளக் கூறல்,

குன்றக் கூறல், மிகைபடக் கூறல்,

பொருள் இலமொழிதல், மயங்கக் கூறல்,

கேட்போருக்கு இன்னா யாப்பிற்று ஆதல்

பழித்த மொழியான் இழுக்கம் கூறல்

தன்னான் ஒரு பொருள் கருதிக் கூறல்

என்ன வகையினும் மனக்கோள் இன்மை

அன்ன பிறவும் அவற்று விரி ஆகும்"

தொல்காப்பியப் பூங்காவ ஆதாரம் காட்டி, அப்துல் கலாம் அவர்கள் இக்குற்றங்களை விளக்குகிறார் (
தில்லி தமிழ் சங்கம் நடத்திய  “தமிழ் 2010” கருத்தரங்கத்தின் நிறைவு விழா)





(1) முன்பு கூறியதையே பின்பும் கூறுவது என்ற கூறியது கூறல்,

(2) முதலில் ஒன்றைக் கூறி விட்டுப் பிறகு அதற்கு முரணாகக் கூறல்,

(3) கூற வேண்டியதை நிறைவாகக் கூறாமல் குறைவாகக் கூறல்,

(4) ஒன்றை மிகைப்படுத்திக் கூறல்,

(5) பொருளற்ற செய்திகளைக் குறிப்பிடுதல்,

(6) கேட்போரோ, படிப்போரோ குழப்பமடையுமாறு விளக்குதல்,

(7) கேட்போர் செவிக்கு இனிமை கிட்டாத வண்ணம் சொல்லுதல்,


(8) பெரியோர் பழித்திட்ட சொல்லை; அதன் இழிந்த நிலை கருதாமல் எடுத்தாளுதல்,

(9) நூலின் வாயிலாக வெளிப்படுத்த வேண்டிய அறிவுரை பற்றிக் கவலையுறாமல்,

    தன் கருத்தை எப்படியும் புனைந்துரைத்து இடைச் செறுகலாற்றுதல்,

(10) படிப்போரும், கேட்போரும் சுவைத்திட முடியாத பழுதுற்ற நிலையில் படைத்தளித்தல்

நன்றி: http://www.kpenneswaran.com/

0 comments:

Post a Comment