Subscribe:

Pages

Tuesday, November 8, 2011

குளிரில் குறுகிய காலக் கம்பி: கவிதை அவ்வைமகள்

குளிரில் குறுகிய காலக் கம்பி: கவிதை அவ்வைமகள்
சில்லிட்டுப்போன ராச்சாலையில் தடங்கல் வந்தது கடிதே செல்லும் காலச் சக்கரம் மடிந்து நின்றதுகாலன் வீழ்ந்தான் சக்கரத்தடியில்! அவன் மூர்ச்சித்தசமயம் கடியார முட்கள் முருகித் திரும்பி நகரலாயின இதுதான் சமயமென - ஒரு மணி நேரம்விடுப்பெடுத்துக் கழன்று கொண்டது!
கால நீட்டிப்பு இரவில்!!
தாமசம் வருமென முன்னமே தெரிந்ததால்
சதி வலியத் தேடி வந்தது! பிடியில் முயங்கிய காதலி!!
விடுவனோ காதலன்?முதலாம் ஜாமம் - உல்லாசம் கூடவே ஒருமணி நேரம்!!
சனி இரவென்பதால் சாவதானமாய்
வெளியில் கலாய்த்து
கண்டதைத்தின்று
மாற்றுச்சாவியில்
பூனைபோல் நுழைந்து
தாழப் போய் வீழ்ந்த படுக்கை
கடுப்பில் நழுவிப்போனவளை
தழுவிப்போய் இழுக்க இரண்டாம் ஜாமம் சல்லாபம் கூடவே ஒருமணி நேரம்

விழிதிறந்தும் எழுந்திலர் அன்னையர் - பிள்ளைஅகலாவண்ணம் ழுத்து அணைந்தனர்
உச்சி மோர்ந்தனர்!
கண்கள் நீவி கன்னம் உரசினர்
கனிந்து கொஞ்சி பாடினர் பல்லாண்டு!
மேற்கைத் தசையில் தலையணை இட்டனர்
தாய்மைக் கர்வக்கதப்பு தந்தனர்! மூன்றாம் ஜாமம் குலலாபம் கூடவே ஒருமணி நேரம்!!
யாரோ உதைத்த கதையாய்
தானாய் விழிப்பு வந்திட
அடடா தூங்கிவிட்டேனோ எனப்
பதறிப் போய் - பரபரவென
கைகள் துழவ - வெறுப்பேற்றி
கைக்கு அகப்பட்ட செல்போனில்
மணி ஐந்துதான் ஆனது!! அட்ரா சக்கை!! வாய் மலர்ந்து
பூபாளம் பாடி காளை தூக்கம் வளர்க்குது காலை!! நான்காம் ஜாமம் சுகலாபம் கூடவே ஒருமணி நேரம்!!

கூட்டலும் பெருக்கலும் லாபமென்று
நாள்தோறும் வாசகம் நவின்ற நாவுகள்
கழித்தலும் வகுத்தலும் லாபம் ஈன்றிடும்
காலக் காட்சியில் களிப்புறும் புரட்சி வந்தது !
கதிரவன் காலிடை அகலம் குறைதலில்
வெம்மை விலகிட வெளிச்சம் அகன்றிட
இரவில் வேடிக்கைப் பார்க்குது ஞாலத் தும்பி
குளிர் வெட்டிக் குறுகுது காலக்கம்பி

0 comments:

Post a Comment