Subscribe:

Pages

Tuesday, January 4, 2011

விண்ணில் மரித்த பறவைகள்!! பீபீப் பறவைகள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற சேதி என்ன?

விண்ணில் மரித்த பறவைகள்!!
பீபீப் பறவைகள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற சேதி என்ன?

ஆர்கான்சாவில், பீபீ எனும் ஊரில், கருப்புப் பறவைகள்  ஆயிரக்கணக்கில்  விண்ணினின்று மரிந்து வீழ்ந்திருப்பது இதுவரை இப்புவி காணா பரிதாபம்.
பற்பல தியரிகளும், யூகங்களும் எழுந்தபடி உள்ள நிலையில், இப்பறவைகள், உள்ளீடான இரத்தப் போக்கினால், மரித்திருப்பதை ஆய்வகப் பரிசோதனைகள் காட்டுகின்றன. நெஞ்சகத் தசை குலைந்து, இரத்த நாளங்கள், வெடித்திருக்கின்றன.

ஒருவாரம் முன்பு, அர்கான்சா நதியில், பத்தாயிரக்கணக்கில், மீன்கள் இறந்து ஒதுங்கின. இதை ஒரு தொடர்பற்ற நிகழ்வாக இப்போது பலர் கருதினாலும், இவ்விரண்டும் தொடர்புடையதாக இருக்கக்கூடும் என்று நம்மை சந்தேகிக்கவைக்கிறது வரலாறு காட்டும் சான்று!

என்ன சான்று? 1956 ல் நிகழ்ந்த மினமட்டா பயங்கரம்!!

அன்று ஜப்பானின் மினமேட்டா வளைகுடாவில் நிகழ்ந்த மினமேட்டா பயங்கரத்தில், முதலில், பாதிப்பைத் தெரிவித்தவை பூனைகளே!!

அடுத்து, தொடர் நிகழ்வுகளாக, மனிதர்க்கு ஏற்பட்டக்  கொடும் கேடுகள் படிபடியாக வெளிப்பட்டன.

இங்கும் அங்குமாக நிகழ்ந்த, தனித்தனி நிகழ்வுளை இணைத்தும் தொகுத்தும், ஆய்வு செய்தபோது, "பாதரச நச்சூட்டல்" என்கிற சித்தாந்தம்  உருவானது.  உணவுச் சங்கிலியில், ஒவ்வொரு இணைப்பிலும், உயிரிகள் எவ்வாறு  தனக்குள் சென்ற நஞ்சைச் செறிவடைய வைக்கின்றன என்பதை அறிவியலாளர்கள் விளக்கினர்.

கடலில் கலந்த  பாதரச நஞ்சு, நுண்ணுயிர்களால்  வீரிய அங்கக மெர்கூரியலாக, வினைமாற்றம் அடைந்து, உருமாற்றம் பெற்றுக் கடல்வாழ்த் தாவரங்களை அடைந்து, தொடர்படிவால்  ஆங்கே செறிவு அடைகிறது.  அத்தாவரங்களை மீன்கள் உண்ணுகின்றன; ஒரு மீன் தொடர்ச்சியாக இத்தாவரங்களை உண்ணுவதால் அவற்றின் உடலிலே தொடர்ச்சியாகப் பாதரச நஞ்சின் அளவு கூடிக்கொண்டே போகிறது; இந்த நச்சு மீன்களை - மீனவர் பிடிக்க, அவர்கள் அவற்றை விற்பனைக்கு அனுப்பும் முன்னரும் - அவற்றை அவர்கள் உண்ணும் - முன்னரும் அம்மீனவர்களோடு  வாழ்ந்துவரும் பூனைகளே உண்ணுகின்றன -

பூனைகளின் உடலில் பாதரச நஞ்சு இவ்வாறு தொடர்ந்து
செறிவடைகின்றது! இவற்றின் உடலில் தாங்கு திறனுக்கும் கூடுதலாக, நஞ்சு சேர்ந்த நிலையில், பூனைகள் வித்தியாசமாகவும், விபரீதமாகவும் கத்தியபடி,  அவலமாகக் குதித்து, நடனமாடி, கடலுள் குதித்து, தற்கொலை செய்து கொண்டன, இதைதான் மினமேட்டா மக்கள் கண்ணுற்றனர் - பத்திரிகைகள் பறைசாற்றின.

ஆனால், முதலில் எவரும் இதனை அவர்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை; பலர் இதனை ஒரு வேடிக்கையாகவும், விளையாட்டுக் களிப்பாகவும் எடுத்துக்கொண்டனர். பூனைகளுக்கு ஏதோ பைத்தியம் பிடித்துவிட்டது எனக் கடலோரச் சிறுவர்கள் கும்மாளம் போட்டனராம்!! ஆனால், "நாமும் இந்நச்சு வலை(லி)யில் சிக்கியிருக்கிறோம் என்பதனை அவர்கள் புரிந்து கொள்ளக் கொஞ்சம் காலம் தேவைப்பட்டது.

பூனைகள் ருசிபார்த்த்பின்னரே தான், மக்கள் பயன்பாட்டுக்கு மீன்கள் செல்லுகின்றன என்ற இயற்கையாய் ஏற்படும் ஒரு செயல் தான் மிகப்பெரியதொரு, அறிவியல் உண்மை வெளிவரக் காரணமாயிருந்தது!
பரப்பரை பரம்பரையாக, மக்களை, முடமாக்கி - பித்தாக்கி இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிற "மினமேட்டா வியாதி" எனப் பெயர்ச் சூட்டப் பெற்றிருக்கிற கொடிய நோய் இன்று ஜப்பான் மக்களின் தொடரும் பிரச்சனையாகும்.

கைக்கடியாரம், தயாரிக்கும் ஒரு வேதித் தொழிற்கூடம், கடலில்  சேர்த்தப் பாதரச நஞ்சு தான் மினமேட்டா  வியாதியின் மூலக் காரணம். இக்கொடூரத்தை உலகத்திற்கு முதலில் வெளிப்படுத்தியவை பூனைகளே!

இன்று பீபீயில், மரிந்து வீழ்ந்திருக்கின்ற கருப்புப்பறவைகள், இப்புவி மண்டலத்தில் ஏற்பட்டிருக்கிற ஒரு பேரபாயத்தின் அறிகுறியாக இருக்கக்கூடும்.

அருகிலும், தொலைவிலும் நிகழ்ந்து வருகிற, துண்டு நிகழ்வுகளை நாம்  இப்போது கவனித்தாக வேண்டும். இவை ஒவ்வொன்றிலும் ஒரு சேதி இருக்கக் கூடும். இவற்றிற்குள்ளே நமக்கு இப்போது புரியாத, ஒரு தொடர்பு இருக்கக் கூடும். பொதுவாக, இயற்கையை உலுக்கும் பேரபாயங்களில், ஏதேனும் ஓர் உயிரினம், அடையாளமாகச் செயல்படும் என்பது நியதி.

எடுத்துக்காட்டாக, நில நடுக்கம் ஏற்படுகிறது என்றால், அது ஏற்படுவதற்குச் சற்று முன்னே. ஆயிரக்கண்க்கில், எறும்புகளும், எலிகளும் இடம் விட்டு இடம் பெயரும் என்பது நமக்குத் தெரிந்த விஷயம் தான்!

விண்ணிலிருந்து, மண்ணில்  வீழ்ந்த இந்த பீபீப் பறவைகள் நமக்கு விட்டுச் சென்றிருக்கிற சேதி என்ன?

0 comments:

Post a Comment