Subscribe:

Pages

Monday, August 15, 2011

வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!



வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!




வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!
பெற்றிகள் யாவும் சேர்ந்தன என்று வெற்றி முழக்கம்!!
கற்றப்பாடங்கள், அறிவுத்தேடல்கள் இட்டுத்தந்த வெற்றி முழக்கம்!!
பெற்ற விடுதலைபெரும்பேறென்று உச்ச முழங்கும் வெற்றி முழக்கம்!!

உற்றமணிக்கொடி ஓங்குகவென்று திசைகள் யாவிலும் வெற்றி முழக்கம்!!
சுற்றம் எனவே இந்தியர்யாவரும் கூடி ஒலிக்கும் வெற்றி முழக்கம்!!
கொற்றம் கொண்டு கொடுமை செய்தவர் ஓடினர் எனவே வெற்றி முழக்கம்!!
மாற்றம் பெற்றோம், மாட்சிமை பெற்றோம் என்றே களிக்கும் வெற்றி முழக்கம்!!

மற்றவர் காணா வகையினில் வளர்ச்சி காணுவோம் என வெற்றி முழக்கம்!!
பற்றது கொண்டு உழைப்போம் பாரதம் பேணுவோம் எனும் வெற்றி முழக்கம்!!
அறமே எங்கள் கேடயம் என்று எடுத்துக்காட்டிடும் வெற்றி முழக்கம்!!
மறமே புரிய மயங்கோம் என்று சூளுரைத்திடும் வெற்றி முழக்கம்!!

ஆற்றல் எங்கள் ஆன்மபலம் என்று ஆர்ப்பரித்திடும் வெற்றி முழக்கம்!!
ஏற்றம் ஒன்றே எங்கள் இலக்கென எடுத்துச்சொல்லிடும் வெற்றி முழக்கம்!!
முற்றம் தோறும் மக்கள் கூடி சபதம் செய்திடும் வெற்றி முழக்கம்!!
சீற்றம் கொண்டு எதிரிகள் ஒடுக்க வீரம் விளைத்திடும் வெற்றி முழக்கம்!!


வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!
வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!
வெற்றி முழக்கம்! விடுதலை வெற்றி முழக்கம்!!

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)


0 comments:

Post a Comment