Subscribe:

Pages

Saturday, February 12, 2011

நானும் பட்டிமன்ற ராஜாவும்

நானும் பட்டிமன்ற ராஜாவும்

பிப்ரவரி ஆறாம் நாள் அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கம் களைகட்டி கவினுறு வனப்புடன் கலகலப்பும், சிரிப்புமாய்க் காணப்பட்டது. காரணம் - பட்டிமன்ற ராஜாவின் வருகை. சங்கத்தின் பொங்கல் விழாக் கொண்டாட்டங்களில் கலந்து கொள்வதற்காக, இங்கு வந்திருந்த ராஜா நடுவராக இருந்து நடத்திய பட்டிமன்றம்  வெகு விறுவிறுப்பாக நிகழ்ந்தேறியது.
                                       இடமிருந்து வலமாக: திருமதி ஜெயா மாறன்,                                                      திருமதி ஜெயா, திரு ராஜா, நான், திருமதி லஷ்மி தேசம் 
வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது உறவுகளா நட்பா என்பது பட்டிமன்ற  விவாதத்தின் தலைப்பு. தலைப்புக்குத் தலா மூன்று பேர் என நாங்கள் “பிளந்து கட்டினோம்.” தனக்கே உரித்தான தனித்துவப்பாணியில், பட்டிமன்றத்தை வளர்த்து வழங்கினார் திரு ராஜா அவர்கள்.

நட்பு தான் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பது என்பது என் கட்சி, திருமதி லஷ்மி தேசம், திரு ஸ்ரீராம் சுப்பிரமணியன் மாறும் நானும் பேச, எதிரணியில் உறவுகள் தாம் வாழ்க்கைக்கு உறுதுணையாக இருப்பவை என திரு பிரதீப் திருமலை, திருமதி, சுரேகா பாலாஜி, மற்றும் திரு ராஜா வேணுகோபால் ஆகியோர் பேச நகையும் சுவையுமாக பட்டிமன்றம் விளைந்து சிறந்தது. 
  
பட்டிமன்றம் தொடங்குவதற்கு முன்னால் எனது அருகில் வந்து ராஜா அமர்ந்து கொண்ட காரணத்தினால், கொஞ்சம் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. தாங்க முடியாத முடியாத குளிர் உடுப்புமேல் உடுப்பாகப் போட்டுக்கொண்டுக் காலம் தள்ளுகிறேன் என்றார். “உடம்பில் கொஞ்சமாவது கொழுப்பு இருக்கவேண்டுமே” என்றேன். “இனிமேல எங்க இதையெல்லாம் புதுசா வளத்துக்கறது” எனது அறிவியல் ஆலோசனைக்கு ஒரு யதார்த்த பதிலடியாய்க் காமடி!!.         

பேசவும், பழகவும் இனியவராய் நேசச் சிறகுகள் விரித்துப் பறந்து வந்து எம்முடன் நட்பு பாராட்டிச் சென்றிருக்கிற ராஜா அவர்கள், இறுக்கமும், இன்னலுமாகச் சென்று கொண்டிருக்கிற இன்றைய வாழ்க்கையில், பற்றாக்குறையாய்ப் போய்க்கொண்டிருக்கிற சிரிப்பையும்  இறுக்கத் தளர்வையும், மக்கள் வாழ்வில் சேர்க்கும் ஒப்ப்பிலாப் பணியைச் செய்து வருகிறார். இப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்திடுவோம்.          

       
    

0 comments:

Post a Comment