சினிமாப் பாடல்கள்: தாழ்ந்தும் - ஒலிக்கும் - தமிழ்ச்சொற்கள்
என் மகன், விக்ரமாதித்தன் ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"என்னோட ராசி நல்ல ராசி ---"
அப்போது என் மகள் ஆதிரை ஒரு கேள்வி கேட்டாள்.
அத்தை மகராசியா?
இல்லை
அத்தைமக ராசியா?
வியந்தேன்!
குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என உற்றுக் கவனித்தேன்.
மிக ஆரோக்கியமாக விவாதித்தார்கள்.
நல்ல மகளைப் பெற்றதால் அத்தை மகராசியே என்றான் மகன். ஆமோதித்த மகள், "ஆனாலும் இப்பாடல் அத்தை மகளையே பாடுகிறது - மகராசிக்குப் பிறந்ததால், பெண்ணும் ராசியானவள் தான் என்றாள்."
தமிழ் தாழ்ந்து விட்டது - ஊடகங்கள் தமிழைச் சிதைக்கின்றன -
என்று நாமெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கின்ற கால கட்டத்தில்,
டப்பாங்குத்துப் பாட்டுக்கு இளைப்பில்லை எனும்படியான இந்தப் பாட்டு,
எங்கள் இல்லத்தில் ஒரு மிகப் பெரிய ஆய்வையே நிகழ்த்திவிட்டது.
தமிழ் வீழாது என்று என் நா முணுமுணுத்தது!!
0 comments:
Post a Comment