Subscribe:

Pages

Wednesday, June 22, 2011

அவன்(ர்): கவிதை

அவன்(ர்): கவிதை   


தான் தெய்வத மாந்தன் என்றே ஒரு கங்கணம் கட்டிக் கொண்டான்
தன அருகில் எனையழைத்து நிலை அளந்து தெரிந்து கொண்டான்
முதல்நாள் மெல்ல அருகில் வந்து விழியால் இதமாய் வருடிவிட்டான் 
மறுநாள் முல்லை மலர்ச் சிரிப்பால் என் உள்ளம் கவர்ந்து சென்றான் 
சின்னஞ் சிறுபிள்ளை போலே அவன் விளையாட்டுக் குறும்பு செய்தான்
இன்னும் இருக்குதென்று மெல்லக் காதில் உரசிச் சொன்னான்
பற்பல வித்தக விளக்கம் தந்து என் இதயம் சிலிர்க்க வைத்தான் 
பாங்காய்க் கவிதை நயமுரைத்து முழுதாய் என்னையே மாற்றி விட்டான் 
புதுச் சேலை கையில் தந்து குழலில் மலர்ச் சரத்தைச் சூட்டி வைத்தான் 
மதி மயக்கம் தீரவல்ல நறு மொழிகள்  பகர்ந்து  சென்றான்
இறைவனின் சந்நிதியில் எனக்குக் குங்குமப் பொட்டு வைத்தான் 
முறையாய்க் கரம் பற்றி அணை த்து என் பெண்மையை உணரவைத்தான் 

அவ்வைமகள் (Dr Renuka Rajasekaran)

0 comments:

Post a Comment