ஆலம் விழுதென ஊன்றி நின்று வாழ்வாய் வாழ்வாய்!
எந்தன் உயிரே எந்தன் உயிரே உன்னை நான் கொஞ்ச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சிப்பேச நீ பக்கம் வேண்டும்!
உந்தன் அன்பு, உந்தன் சிரிப்பு உந்தன் தவிப்பு
உந்தன் நாடல், உந்தன் ஓடல், எந்தன் தேடல்
உன்னை நான் தூக்கி தோளின் மேல் போட்டு
கொஞ்சும் நேரம் அடடா! அடடா!
அழகென்றால் அழகு சுகமென்றால் கோடி
உன்போல் செல்வம் வருமா? வருமா?
நீயும் நானும் ஒன்று தானே செல்லப் பெண்ணே!
உந்தன் சுவாசம் எந்தன் வாசம் உண்மை கண்ணே
மடியின் மேல் நீயும் பதுமை போல் படுப்பாய்
உன் உச்சி மோர்வேன் ஆஹா ஆஹா
உன்கை என் மார்பில் கோலங்கள் போடும்
என் கண்கள் மூடி சொர்க்கம் காணும்
உந்தன் குறும்பு, உந்தன் கொஞ்சல், உந்தன் சேட்டை,
நானும் உந்தன் ஸ்பரிசத்தாலே கர்வம் கொள்வேன்
காலமும் மாறும் காட்சியும் மாறும்!
மாறாதென் அன்பு மகளே! மகளே!
உந்தன் வளர்ச்சி எந்தன் வாழ்வின்
லட்சியமென்றே சொல்வேன் சொல்வேன்!
நீ பிறந்து கவுரவம் தந்தாய் தங்கப் பெண்ணே!
உந்தன் நலமே எந்தன் மந்திரம் என்றே சொல்வேன்
பண்பும், குணமும், பாசமும் வேண்டும்!
கல்வி கலைகள் நிச்சயம் வேண்டும்
சொல்வன்மை வேண்டும் சூட்சுமம் வேண்டும்
தர்மம், உதவி, செய்வாய் பெண்ணே!
எந்தன் மனதில் எந்த நொடியும் உந்தன் அன்பே!
ஆலம் விழுதென ஊன்றி நின்று வாழ்வாய் வாழ்வாய்!
Reply | Forward | Jerald is not available to chat |
0 comments:
Post a Comment