Subscribe:

Pages

Sunday, January 30, 2011

ஆலம் விழுதென ஊன்றி நின்று வாழ்வாய் வாழ்வாய்!

ஆலம் விழுதென ஊன்றி நின்று வாழ்வாய் வாழ்வாய்!     

எந்தன் உயிரே எந்தன் உயிரே உன்னை நான் கொஞ்ச
கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சிப்பேச நீ பக்கம் வேண்டும்!
உந்தன் அன்பு, உந்தன் சிரிப்பு உந்தன் தவிப்பு
உந்தன் நாடல், உந்தன் ஓடல், எந்தன் தேடல்  

உன்னை நான் தூக்கி தோளின் மேல் போட்டு   
கொஞ்சும் நேரம் அடடா! அடடா!
அழகென்றால் அழகு சுகமென்றால் கோடி 
உன்போல் செல்வம்  வருமா? வருமா?
நீயும் நானும் ஒன்று தானே செல்லப் பெண்ணே!
உந்தன் சுவாசம் எந்தன் வாசம் உண்மை கண்ணே  

மடியின் மேல் நீயும் பதுமை போல் படுப்பாய் 
உன் உச்சி மோர்வேன் ஆஹா ஆஹா
உன்கை  என் மார்பில் கோலங்கள் போடும்
என் கண்கள் மூடி சொர்க்கம்  காணும்
உந்தன் குறும்பு,  உந்தன் கொஞ்சல், உந்தன் சேட்டை,
நானும்  உந்தன் ஸ்பரிசத்தாலே கர்வம் கொள்வேன்

காலமும் மாறும் காட்சியும்  மாறும்!
மாறாதென் அன்பு மகளே!  மகளே! 
உந்தன் வளர்ச்சி எந்தன் வாழ்வின்
லட்சியமென்றே சொல்வேன் சொல்வேன்!    
நீ பிறந்து கவுரவம் தந்தாய் தங்கப் பெண்ணே!
உந்தன் நலமே எந்தன் மந்திரம் என்றே சொல்வேன்

பண்பும், குணமும், பாசமும் வேண்டும்!
கல்வி கலைகள் நிச்சயம் வேண்டும்
சொல்வன்மை வேண்டும் சூட்சுமம் வேண்டும்
தர்மம், உதவி, செய்வாய் பெண்ணே!
எந்தன் மனதில் எந்த நொடியும் உந்தன் அன்பே!  
ஆலம் விழுதென ஊன்றி நின்று வாழ்வாய் வாழ்வாய்!     


Reply

Forward

Jerald is not available to chat

Sunday, January 23, 2011

உங்களுக்குத் தெரியுமா?- விடை

உங்களுக்குத் தெரியுமா?

முப்பழம், நாற்றிசை, ஐம்பொறி, அறுசுவை, எழு நிறம், எண்மர், நவதானியம் - இவை ஒவ்வொன்றும் யாவை?

உங்கள் விடையைச் சரி பார்க்க வேண்டுமா?
விடை
முப்பழம்:  மா, பலா, வாழை
நாற்றிசை: கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு
ஐம்பொறி: மெய், வாய், கண், காது, மூக்கு 
அறுசுவை: உப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு, இனிப்பு, கைப்பு
எழு நிறம்: ஊதா, கரு நீலம், நீலம், பச்சை, மஞ்சள். இளஞ்சிவப்பு, சிவப்பு 
எண்மர்: அஷ்டதிக் கஜங்கள் என்று சொல்லப்படுகின்ற திசைக்  காவலர்கள். கிழக்கு, மேற்கு, 
வடக்கு, தெற்கு எனப்படும் நான்கு திசைகளுக்கும் இடையே அமையப்பெறும் சந்தித்திசைகளான வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு ஆகியனவற்றையும் திசைகளாகக் கொள்ளுகின்றபோது மொத்தம் எட்டு திசைகள் வருகின்றன. திசைக்கு ஒரு காவலன் என மொத்தம் எட்டு பேர்.

நவதானியம்: நெல், கோதுமை, துவரை, பாசிப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை, உளுந்து, எள், கொள்,

 
 
 
 

தெரியுமா உங்களுக்கு? -- விடை

தெரியுமா உங்களுக்கு?

Australopithecine”  என்றால் என்ன?

உங்கள் விடையைச் சரி பார்கவேண்டுமா?

விடை

நாற்பது லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனித மூதாதையர்கள்.

இப்போதுள்ள மனிதனையொத்த கால்களும், பற்களும் அமையப் பெற்றிருந்தவர்கள்  

தெரியுமா உங்களுக்கு? -- விடை

தெரியுமா உங்களுக்கு?

மொத்தம் எத்தனை அவ்வையார்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்?
அவர்கள் எந்தெந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்? 

உங்கள் விடையைச் சரி பார்கவேண்டுமா?

 விடை
 
இரண்டு 
 
வ்வையார் I : சங்க காலம் 
வ்வையார் II : சோழர் காலம் 

 


Saturday, January 22, 2011

இலக்கம்


இலக்கம்

எண் என்றால், பொதுவக அராபிய எண்களைபயே நாம் பயன்படுத்துகிறோம். ஆனால், பண்டையத் தமிழ் மரபில் தமிழ் எழுத்துக்களை வைத்தே எண்களை எழுதி வந்தார்கள். எடுத்துக்காட்டாக, ஒன்றிலிருந்து பத்து வரை எண்களை எவ்வாறு எழுதுவது என்பதைக் காணுங்கள். பயின்று, பயிற்சி செய்யுங்கள்.

௧, ௨, ௩, ௪, ௫, ௬, ௭, ௮, ௯, ௰


உங்களுக்குத் தெரியுமா?

முப்பழம், நாற்றிசை, ஐம்பொறி, அறுசுவை, எழு நிறம், எண்மர், நவதானியம் - இவை ஒவ்வொன்றும் யாவை?

உங்கள் விடையைச் சரி பார்க்க வேண்டுமா?
கொஞ்சம் பொறுத்திருங்கள்!!

இலக்கணம்


இலக்கணம் 

விதி

எண்ணிக்கையுடன் வரும்  பெயர்ச் சொற்களை எழுதுகின்றபோது, ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து ஆகிய எண்பகுதிகள் மாற்றம்பெறும்.

எடுத்துக்காட்டு
ஒற்றிலை, ரெட்டிலை, முப்பழம், நாற்றிசை, ஐம்பொறி, அறுசுவை, எழு நிறம், எண்மர், நவதானியம், பதின்மர்

பொருள்

ஒற்றிலை என்பது ஒற்றை இலை
ரெட்டிலை என்பது இரண்டு இலைகள்
முப்பழம் என்பது மூன்று பழங்கள்
நாற்றிசை என்பது நான்கு திசைகள்
ஐம்பொறி என்பது ஐந்து பொறிகள்
அறுசுவை என்பது ஆறு சுவைகள்
எழுநிறம் என்பது ஏழு நிறங்கள்
எண்மர் என்பது எட்டு நபர்கள்
நவதானியம் என்பது ஒன்பது தானியங்கள்
பதின்மர் என்பது பத்து நபர்கள்

தெரியுமா உங்களுக்கு?


தெரியுமா உங்களுக்கு?

Australopithecine”  என்றால் என்ன?

உங்கள் விடையைச் சரி பார்கவேண்டுமா?

கொஞ்சம் பொறுத்திருங்கள்.

தெரியுமா உங்களுக்கு?

தெரியுமா உங்களுக்கு?

மொத்தம் எத்தனை அவ்வையார்கள் வாழ்ந்திருக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்?
அவர்கள் எந்தெந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்? 

உங்கள் விடையைச் சரி பார்கவேண்டுமா?

கொஞ்சம் பொறுத்திருங்கள்.


எங்கும் எதிலும் எதிர் நீச்சல்


எங்கும் எதிலும் எதிர் நீச்சல்

விந்துப்பசையில் கோடிப்பேரை முந்திப்பாய்ந்தேன் முதல் எதிர் நீச்சல்
சந்துத்தசைக்குள் அண்டம்சினைபட நீந்திச்சேர்ந்தேன் மறுஎதிர் நீச்சல்
எந்தையும் நன்றெனன் எந்தாயும் முயன்றனள் நஞ்சுக்கலவையில் நான் எதிர் நீச்சல்
நிந்தைமழையில் ஒன்பதுத்திங்களும் நான் போட்டேன் கடுமெதிர் நீச்சல்
பந்தய நாளும்வந்தது பனிக்குடம் பிளந்தது உதிரஓடையில் என் உக்கிர நீச்சல்
அந்தயக்கதவைத்திறந்து வெளியில் குதிக்க நான் போட்டேன் பராக்கிரம நீச்சல்
முந்தை நீச்சல் முடியா நிலையினில் பிந்தைவீச்சிலும் தொடர் எதிர் நீச்சல்
கந்தைப் போர்வையில் மோவாய் நீச்சல், மார்பால் நீச்சல், முட்டி நீச்சல், முழங்கால் நீச்சல் தொடர்
உந்து நீச்சலில் நான்போட்டது தரையில் நீச்சல், தடுக்கில் நீச்சல், மடியில் நீச்சல், மலத்தில் நீச்சல்
சொந்தக்காலில் இடன்றவாகினில் கபடி நீச்சல், கரடி நீச்சல், வானர நீச்சல் -வலியோர்
ஆந்தைப் பார்வையில் நடுங்கிவீழ்ந்து நான் விரைந்தது நாட்டிய நீச்சல் - வாழ்க்கைச்
சந்தைவீதியில் சரிந்தவாகினில் நான் போட்டேன் பராசுரநீச்சல்    உளச்
சிந்தை நிலையில் ஒவ்வொரு கணமும் நான் போட்டது அமில நீச்சல்
சொந்தமும் பந்தமும் முன்னித்தள்ள நான் பிழைத்தேன் முழு எதிர் நீச்சல்
வந்ததும் வாய்த்ததும் பின்னித்தள்ள நான்  ஏறினேன் உரிமர நீச்சல்
வெந்த மனதிலும் நொந்த உடலிலும் சொந்தமென்றானது எதிர்நீச்சல் ஒன்றே
அந்தமா ஆதியா என்பதில்லாமல் எடுப்பவையாவிலும் எதிர்த்தே நீச்சல்
எந்த வழியிலும் எந்த வகையிலும் எந்தன் இயக்கம்  எதிர் நீச்சலென்றானதால்
இந்த நீச்சலா அந்த நீச்சலா எது பெரிதென்பதாய் என் நித்தியப் பாய்ச்சல்
இந்த நீச்சலில் நானே மட்டுமா எனத்திரும்பிப்பார்த்தேன் கண்ணின் வீச்சில்
அந்த வானிலும் மண்ணிலும்  கண்டேன் கடும் எதிர் நீச்சல் காட்சிகள்!
காந்தப்புலமிடை நீச்சல்  மறந்தால் விண்ணில் கோள்கள் இயங்கிட முடியுமா?
கந்தப்புகையிடை அக்கினி நீச்சல் மறந்தால் எரிமலையிருப்பது தெரியுமா?
மந்தாரைகள் காற்றில் நீச்சல் மறந்தால் மகரந்தம் பரவிட முடியுமா?
செந்நாரைகள் விண்ணில்  நீச்சல் மறந்தால் வலசை போகிடலாகுமா? இயற்கை
ஏந்திடும் தெய்வம் காட்டும் குறிகளில் நீச்சலும் பாய்ச்சலும் வெற்றியின் இலக்கணம்
காந்திடும் உள்ளம் தண்குளிர்வைக்க்காண்பது எதிர் நீச்சலின் மாபெரும் இரகசியம்  
எந்தத்துறையிலும் சாதனை இருக்கை நேரெதிர்க்கரையின் வழுக்குப்பாறை
அந்தத்துறையில் ஏறி வழுக்கை வழுக்கி ஓடிடச்செய்தல் சரித்திர முத்திரை
இந்த வாழ்வில், சோதனையாவையும் துகளாய் மாற்றிடும் நம் எதிர் நீச்சல்
மந்த மனதையும் மட்டிலா ஆற்றல் பெய்தாட்டிடும் மகத்துவம் வாய்ந்தது நம் எதிர் நீச்சல்
விந்தையல்ல வாழ்க்கையின்  உண்மை எதிர் நீச்சலே என்பது வாழ்ந்தவர் சான்று; ஞான
வேந்தராய், நாம் மாற்றம் பெற்றோங்கிட எதிரிடை நீச்சல் ஒன்றே ஊன்றுகோலாகும்!

அவ்வைமகள்