இலக்கியவட்டத் தலைவராக, பொறுப்பாசிரியராக
அட்லாண்டா மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் இலக்கியவட்டத் தலைவராக, என்னை ஆக்கிப் பார்ப்பதில், மிகுந்த ஆர்வத்தைக் காட்டியவர்கள் இருவர்: திரு சந்த் குப்புசாமி அவர்கள்; திரு இரவி பழனியப்பன் அவர்கள்.
திரு சந்த் குப்புசாமி அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் தலைவராக இருந்தவர். திரு இரவி பழனியப்பன் அவர்கள் கடந்த ஆண்டு சங்கத்தின் துணைத் தலைவராகவும், இவ்வாண்டு, சங்கத்தின் தலைவராகவும் இருப்பவர்.
காட்சிக்கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம்
என்ற வள்ளுவரின் வாக்குக்கு ஏற்ப அடக்கமாய், அன்பாய், எளிமையாய் எங்களுக்குள் வளையவரும் இரவி அவர்களின் தலைமையில் பலப் பல புதுமைகள் நிகழ்ந்தேறி வருகின்றன.
குறிப்பாக, எமது வசந்தமலர் புத்தொளி பெற்று, புதுவடிவில் வெளிவருவதற்கு இவரது தலைமைப் பண்புகளே முதற்காரணம் என்பேன். என்னைப் பொறுப்பாசிரியராக்கி, காரியத்தில் குறியாயிருக்கும் ஒரு குழுவைக் களத்தில் இறக்கி இவர் தலைமையிலே பற்பல சீர்திருத்தங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
உலகின் புகழ்பெற்ற வெளியீடுகளின் வடிவத்தை சவாலுக்கு அழைக்கும்படியான "லே அவுட்" (ராம் மோகனின் கைவண்ணத்தால்) கொண்டு, காலம் தப்பாது மொட்டவிழும் வசந்த மலரின் மணத்தை எவரும் நுகரும்படியாக வசதி செய்திருக்கும் இந்தப் புதிய ஏற்பாட்டின் சிற்பி, இப்புதியக் குழுவின் நாயகன், இரவி பழனியப்பன் அவர்களே.
இயக்கம் என்றால் இதுவன்றோ இயக்கம் எனும்படியாக இயங்கும் வசந்தமலாரின் குழு பற்றி நாம் பேசுவோம்.
0 comments:
Post a Comment