Subscribe:

Pages

Sunday, June 5, 2011

The Sailor’s Tale: Poem by Adhithya Rajasekaran


The Sailor’s Tale
Poem by Adhithya Rajasekaran

Small was the stream,
And I heard the baby pigeon scream,
The first lesson was flying,
To protect the small bird from dying.

By the side of the pigeon I ride,
Into the universe which the tall trees hide,
Feeling the security of my shadows,
I took my flute to sing in the meadows.

There is still a lot to come,
For I am away from home,
For ill or good, let the wheel turn.

Slowly and steadily, the seasons change,
Pleasantness of the green trees began to wane.
Have I my own sword,
From now, I am responsible to god.
I was in the midst of my swagger,
While the stream became unnoticeably larger,
Lucky was my bait,
More fish came to me as I wait.

There is still lot to come,
I was more happy than I would ever become,
For ill or good, let the wheel turn.

I didn’t see the hawks gazing,
Nobody knows the reason for their chasing.
As dogs, they made their way into my shade,
In return, they promised me for a life-time abode.

My boat was completely filled with fish,
To make more than a million dish.
The happy moments didn’t last,
For the time that ran extremely fast.
There is still lot to come,
God decided to teach me a lesson through his hum,
For ill or good, let the wheel turn.

The fish slowly began to ran out,
Leaving was the thing that the dogs were planning about,
They waited for an early morning clear sky,
They began hawks again and soared up high.

My heart was beating in pain,
And my brain was defeated in feign,
It was calm before storm,
I never expected sea to transform.

I swam across the bitter seas,
And reached the sand engulfed by the bees.
The beekeeper was an old wench,
Who gave me some honey to munch.
She took me to the ranch,
And showed me a tree branch.
A bee was persevering to build the hive at the back,
Every time it failed, and but rose aback.

Willed, I rebuilt the boat.
Determined to get a stable float,
I left to the unknown destination,
Which is out of the human estimation.

There is still lot to come,
For I am always away from the dumb,
For ill or good, let the wheel turn.

Adhithya Rajasekaran

சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்


சேக்கிழார் திருக்கோயில்: குன்றத்தூர், சென்னை 

அலகில்  சோதியன்  அம்பலத்தாடுவான்: சேக்கிழாரும் ஐன்ஸ்டீனும்  

உலகெலாம்  என இறைவன் முதற்சொல்  எடுத்தளிக்க 

உலகு எலாம் உணர்ந்து  ஓதற்கரியவன் 
நிலவு உலாவிய நீர்மலி வேணியன் 
அலகில்  சோதியன்  அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்பு அடி வாழ்த்தி வணங்குவாம்    

எனத் திருமலைச் சருக்கம் எனும் முதற்காண்டத்தின்முதற்பாடலாய் எழுந்து பெரிய புராணத்தின், துவக்கத்தை அறிவிக்கும் சேக்கிழாரின் இப்பாடல், ஒரு மாபெரும் அறிவியல் களஞ்சியமாகத் திகழ்கின்றது. 

நிலவு பூமியின் துணைக்கோள் - முக்கால்  பங்கு நீரால் அமைந்துதது பூமி -
இத்தகைய பூமியில்  உறையும், உணர்வுத் திறன் கொண்ட யாவும்  உணர்ந்தும் - உணர்ந்து கொண்டதை விரித்தும் ஓதுதற்கு அரியதானது இறைவன் எனும்  பரம்பொருள் - அப்பரம்பொருளை அளக்கும்  அலகு யாதெனில் அது ஒளியே! இவ்விதமான தன்மையுடைய பரம்பொருளான  ஈசன் அம்பலத்தில் ஆடுகின்றான்!! சிலம்பணிந்த அவனது மலர்ப் பதங்களை வாழ்த்தி வணங்குவம்!! --- இது இப்பாடலின் பொருள்.  

அறிவியல் விதிப்படி, பிரபஞ்சத்தின் இயக்கங்கள்  யாவுமே ஒளியின் வேகத்தை  அடிப்படையாகக் கொண்டு மட்டுமே அளவிடப்படுகின்றன.
ஐன்ஸ்டீனின்  சார்புக் கோட்பாடு  (Theory of Relativity)  புவியில் இயக்ககங்களின்  கூறுகளுக்கு, ஒளியின் வேகத்துடன் தம்மை ஒப்பிடும் தன்மை (Relative value)  மட்டுமே உண்டு  ஆனால் அவற்றிற்கென்று தனித்துவ அளவும் மதிப்பும் (Absolute value) கிடையாது -- என்று கூறுகிறது.

ஒளிவடிவான பரம்பொருள் அம்பலத்தில் ஆடுகிறது என்பதே அறிவியல் மீண்டும் மீண்டும் நமக்குக் காட்டும் பேருண்மை. Space எனப்படுகின்ற வெட்டவெளியில் இப்பரம்பொருள்  ஓரிடத்தில் தேங்கிவிடாமல், எல்லாத் திசைகளிலும், தூசு தும்பு முதல், கோள்கள் ஈறாக, உயிருள்ளது உயிரற்றது என்ற பாகுபாடு இல்லாமல், அனைத்தையும் ஆட்டிவைக்கிறது என்பது அறிவியல் கூறும் உண்மை. 

உயிருள்ளதா உயிரற்றதா என்ற பாகுபாடு இல்லாமல் அனைத்துப் பொருட்களின் அணுவிலும் எலெக்ட்ரான்கள் ஓயாமல் வலம் வந்து கொண்டே இருக்கின்றன!!

உயிரற்றப்  பொருட்களில் Potential Energy எனப்படும் இருப்பு ஆற்றலும், உயிருள்ளப் பொருட்களில் Kinetic Energy எனப்படும் இயக்க ஆற்றலும் பொதிந்திருப்பதை அறிவியல் காட்டுகிறது. 

அம்பலம் எனும் தமிழ்ச் சொல் "Space"  எனப்படும் வெளியைக் குறிக்கிறது. தில்லை நடராஜர் ஆலயத்தில், திரைக்குள் நுழைந்து பரம்பொருளின் ரகசியத்தை அண்ணாந்து வெட்டவெளியில் காணும்  சூத்திரம், தமிழ்ப் பெரியார்கள் எத்தனை அறிவியல் ஞானத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டு.
தாமிரசபை, பொற்சபை என்று இறைவனுக்கு திசைகள் தோறும் அம்பலம் அமைத்து  வெட்டவெளியில் பரம்பொருள் நிகழ்த்தும் இயக்கத்தில், நமது இயக்கம் ஒரு அங்கம் - என ஒவ்வொவொரு நாளும் நமக்கு நினைவூட்டும் வித்தகம் எண்ணுந்தோறும் நமக்குள் பரவசத்தை ஏற்படுத்துகிறது. 

"ஆதிபகவன் முதற்றே  உலகு" எனப்  பொய்யாமொழிப் புலவர் கூறிய வாசகம் இங்கே ஒப்புகூறத்தக்கது   

நடராஜர் தத்துவம் எனபது ஆழ்ந்து உணரத்தக்கது. காலைத்தூக்கி நின்றாடும் நாடும் தெய்வம் காட்டுவது, நிற்பது என்பது மரணத்திற்கு ஒப்பானது - இயக்கம் மட்டுமே வாழ்வாகும் என்பதே -- அதுவும் நமது இயக்கத்தில் - வேகம் இருக்கும் வேளையில் - நடுவு நிலைமை வேண்டும் - என்பதை - ஒருகாலைத்தூக்கிய  பாவனையில் உணர்த்தப்படுகிறது.

இரவு நீங்கி ஒளிபுகும் காலையில் உலகின்  இயக்கங்கள் எழுப்பும் ஒலியும், தாவரத்தொகுதிகளின், மலர்ச்சியும், இங்கும் அங்குமாய்ப்பாயும் பறவைகளின் தாவலும் காட்டும் காட்சி  அப்பப்பா! சொற்கள் போதா விவரிக்க!!


ஆற்றல் மாறாவிதிக்கு வித்திட்ட லவோய்சியர் 

அடியும் முடியும் இல்லா அண்டவெளியில் நின்ற வாக்கில் பூமியின் மீது பதியாப் பாதங்களுடன், பரம்பொருள் விளைக்கும் ஒரு சிறு நாட்டிய அசைவு - எத்தனைப் பேரின்பமான ஒலிஒளிக் காட்சிகளை உண்டாக்குகின்றது!! 
மலர்ச் சிலம்படி என்பது இந்த அற்புத நாட்டிய அசைவையன்றோ?


ஒளியால் மட்டுமே அளவிடக்கூடிய ஈசனின் படைப்பாற்றலில் நாமும் ஒரு அங்கம் என்பதனை நாம் ஒவ்வொருவரும் உணர்ந்தோமென்றால், நாம் தேக்கநிலையை மறுத்தும் விடுத்தும் செம்மையாய் இயங்கலாவோம். 

எனது பள்ளிப் பருவத்தில் ஆரம்பப் பள்ளியில்  நாள்தோறும் நாங்கள் பாடிய பிரார்த்தனைப் பாடல் என் காதுகளில் இப்போது ஒலிக்கிறது-
சூரியன் வருவது யாராலே?
சந்திரன் தெரிவது எவராலே?
வானில் மின்னும் மின்மினி போல் கண்ணில் தெரிபவை அவை  என்ன?
பேரிடி மின்னல் எதனாலே? பெருமழை பொழிவது யாராலே?
யாரிதற்கெல்லாம் அதிகாரி?
அதை  நீ அறிந்திடல் வேண்டாமோ?

பரம்பொருள் வெட்டவெளியில் பறந்து விரிந்த வகையில் வியாபித்திருப்பதை நம் ஆன்றோர் எடுத்துக் கூறியிருப்பதும், இறைவனோடு ஐக்கியமாவதை வாழ்நாள் பயனாகக் கருதுவதும், திரண்ட அறிவியல் கருத்துக்களாகும் என்பதை மீண்டும் மீண்டும் நினைத்துப் பயன்பெறுவது சிறப்பு. 

Law of Conservation of Energy எனப்படும் ஆற்றல் மாறா விதியையும்,  First Law of Thermodynamics எனப்படும் வெப்ப இயக்கத்தின் முதல் விதியையும் வெட்ட வெளியும் இயங்கும் பரம்பொருளும் நமக்குக் காட்டுகின்றன என்பதை  நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

வெப்ப இயக்கத்தின் முதல் விதியை வழங்கிய ஹெல்ம்ஹோல்ட்

மறுபிறவி எனும் அசைக்கமுடியாத கோட்பாடு நமது தமிழ்ச்சமய வழக்கில் இருப்பது, அறிவியல் சிந்தனைகளில் நாம் எத்தனை உயர்வாய் விளங்கி வந்திருக்கின்றோம் எனபதற்கு மற்றுமொரு சான்று.
       
நமது உடலும் உயிரும் ஆற்றல் பெட்டகங்கள், மரணமெனும் நிகழ்வால் இந்த ஆற்றல் அழிந்து போக வாய்ப்பில்லை. எவ்வகையிலேனும் இன்னொரு வடிவு (form) இந்த ஆற்றலுக்குத் தேவை. எனவே மறுபிறவி என்பது ஏற்றுக்கொள்ளத் தக்கதே!! (மனிதர்கள் இறக்கும்போது ஒளிவடிவாக உயிர் பிரிவதைப் பல சமயங்களும் நம்புகின்றன. பல திரைபடங்களில் இவ்வாறான உருவகத்தையும் நாம் காண்கிறோம்). 

தொடர்ந்த பிறவிகளால் இயக்கங்கள் செம்மைப்பட்டு மேன்மை அடைந்த நிலையில், இறுதியாக  தனிமனித ஆற்றலானது ஆண்ட வெளியில் நிறைந்த பரம்பொருளோடு இரண்டறக் கலந்து விடுகிறது என்பதை, வீடு பேறு, மோட்சம், எனப் பல வகைகளில் நமக்கு உணர்த்தும் நம் முன்னோரின் விவேகத்தை என்னென்று சொல்வது? மனிதர்கள் இறப்பதை,  "இயற்கை எய்தினார்", "இறைவனுடன் இரண்டறக் கலந்தார்," "ஈசன் பாதம் சேர்ந்தார்" என அழகாக வருணிக்கும் தமிழ்ப் பதங்களுக்கு எத்தனை வணக்கம் செலுத்தினாலும் தகும்.   
பரம்பொருள் எனும் சித்தாந்தம் அறிவியலில், உலகின் முதலும் இறுதியுமான ஆற்றல் கருவூலத்தைக் (the Ultimate Reservoir of Energy) குறிக்கிறது. இந்தக்  கருவூலத்திலிருந்து எடுக்கப்படும் ஆற்றல் எவ்வாறேனும் , எந்தக் காலநிலை யிலேனும் மீண்டும் இந்தக் கருவூலத்தை அடைந்தாக வேண்டும். ஆற்றல் மாறா  விதியின் அடிப்படைக் கோட்பாடு இதுவே (energy can neither be created nor destroyed but can be  transformed from one form to the other) !! வெப்ப இயக்கத்தின் முதல் விதியும் இதுவே (The total energy of the universe is constant). மறுபிறவி என்பது ஆற்றல் வேறு  உருவத்துக்கு மாறும் எளிய நிகழ்வாக எண்ணுதல் எளிமையான அறிவியல் சிந்தனை.

திருவாசகம், "போக்கும் வரவும் இலாப்  புண்ணியனே என ஈசனை" விவரிப்பதும், "விண்ணிறைந்து - மண்ணிறைந்து - மிக்காய்  விளங்கொளியாய் - எல்லை இலாதானே" என்று போற்றுவதும்  இங்கு நினைந்து  உணரத் தக்கது. 

  
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்  -இறைவனடி சேராதார்  
என்றாரே வள்ளுவர். இந்த உலகப் பொதுமறை, பிறவிகளுக்கு இறுதியாய் இறைவனடியை  குறிப்பிடுவது, சேக்கிழாரின் மலர்ச் சிலம்படிதானே?


  ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு தந்த ஐன்ஸ்டீன்

ஐன்ஸ்டீனின் ஆற்றல் - பொருண்மை வாய்ப்பாடு அல்லது சூத்திரம் (Einstein's Mass--Energy equation)
E = mcc

என்பதாகும். இதில் c என்பது ஒளியின் வேகத்தைக் குறிப்பதாகும். எனவே  நபர் எவராகினும் சரி - அவரது தோற்றமும் இயக்கமும் ஒளிபொருந்தியதாக - அறியாமை எனும் இருளிலிருந்து விடுபட்டதாக - தனது மற்றும் பிறரது வாழ்வுக்கு வெளிச்சம் தருவதாக - உயர்நிலைகளுக்கு இட்டுச்செல்வதாக - பரம்பொருள் எனும் பிரபஞ்சப் பேராற்றலை உணர்ந்து போற்றுவதாக - அமைய வேண்டும் என்பது அடிப்படை. 

"தோன்றிற் புகழோடு தோன்றுக" என்ற வள்ளுவரின் உறுதியான் கட்டளையைக்  காண்க.

பாரதியின் ஊழிக்கூத்து பிரபஞ்ச இயக்கத்தின் இன்னபிற பரிமாணங்களை நமக்களிக்கும் இன்னுமொரு கருவூலம். 

ஊழிக்கூத்து பற்றிப் பேசுவோம்.  

    



   

              

Saturday, June 4, 2011

சினிமாப் பாடல்கள்: தாழ்ந்தும் - ஒலிக்கும் - தமிழ்ச்சொற்கள்

சினிமாப் பாடல்கள்:  தாழ்ந்தும் - ஒலிக்கும் - தமிழ்ச்சொற்கள் 

என் மகன், விக்ரமாதித்தன்  ஒரு பாட்டை முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.
"என்னோட ராசி நல்ல ராசி ---"

அப்போது என் மகள் ஆதிரை  ஒரு கேள்வி கேட்டாள்.

அத்தை மகராசியா?
இல்லை 
அத்தைமக   ராசியா? 

வியந்தேன்!

குழந்தைகள் என்ன செய்கிறார்கள் என உற்றுக் கவனித்தேன்.
மிக ஆரோக்கியமாக விவாதித்தார்கள்.

  
நல்ல  மகளைப் பெற்றதால் அத்தை மகராசியே என்றான் மகன். ஆமோதித்த மகள், "ஆனாலும் இப்பாடல் அத்தை மகளையே பாடுகிறது - மகராசிக்குப் பிறந்ததால், பெண்ணும் ராசியானவள் தான் என்றாள்."  
 
தமிழ் தாழ்ந்து விட்டது - ஊடகங்கள் தமிழைச் சிதைக்கின்றன - 
என்று நாமெல்லாம் புலம்பிக்கொண்டிருக்கின்ற கால கட்டத்தில்,
டப்பாங்குத்துப் பாட்டுக்கு இளைப்பில்லை எனும்படியான இந்தப் பாட்டு,
எங்கள் இல்லத்தில் ஒரு மிகப் பெரிய ஆய்வையே நிகழ்த்திவிட்டது.
  
தமிழ் வீழாது என்று என் நா முணுமுணுத்தது!! 

படம் பார்த்துப் பகர்

படம் பார்த்துப் பகர்


"எடுப்பில் அதே மிடுக்கு 
இடுப்பில் அதே உடுப்பு"

அரிதான வண்ணப்படங்களை நமக்கு அளிக்கும் www.onlyfunpics.com  காணுந்தோறும் காணுந்தோறும் நம்மைப் புதிது புதிதாகச சிந்திக்க வைக்கும் பல் வேறு படங்களில் நான் கண்ட ஒன்று. தலைப்பு மட்டும் என் உபயம்.
 

ஒரு மணி நேரம்: சிறு கதை


ஒரு மணி நேரம்: சிறு கதை  

மொழிபெயர்ப்பு: ஆங்கிலத்தில் கேத் சோப்பின் எழுதிய ஒரு மணி நேரத்தின் கதையின் தமிழ் மொழிபெயர்ப்பு. மொழிபெயர்த்தவர்: விக்ரமாதித்தன் (Adhithya Rajasekaran), நம் அம்பராத்தூணியின் திருக்குறள் வாசிப்பாளர். 

அவள் மென்மையானவள் இந்த திடீர் அதிர்ச்சியை அவள் தாங்கமாட்டாள் என்று  உறவினர்கள், அவளுடைய கணவன் இறந்த துக்கச் செய்தியை வள்ளியம்மையிடம்  நிதானமாக, பெரும் ஆரவாரமில்லாமல் வெளியிட்டனர்.
அவளுடைய சகோதரி சிந்தாமணி, பாதி வரிகளை விழுங்கி, குறிப்பினால் அவளுடைய கணவனின் மறைவை உணர்த்தினாள். அவர்களின் குடும்ப நண்பர் சிங்காரவேலனும் அங்கே நின்றுகொண்டிருந்தார். தன்னுடைய பத்திரிக்கைக்கு ரயில் விபத்தில் இறந்தவர்களின் பெயர்களை நிருபர்  கொடுக்க, அதில் வள்ளியம்மையின் கணவர் கபிலனின் பெயரைப் பார்த்து முதலில் அதிர்ச்சியில் உறைந்தவர் அவரே! தன் பால்ய சிநேகிதனின் மகளான வள்ளியம்மையை குழந்தைப் பருவத்திலிருந்தே பார்த்து வருபவர் சிங்காரவேலர். சுட்டிப்பெண்ணாய், குறும்பும், துள்ளலும், ஓட்டமுமாய் குழந்தைப் பருவம், கன்னிப் பருவம் என இருந்த வள்ளியம்மை, கல்யாணத்திற்குப் பிறகு நேரெதிர்.   பிறந்த வீடு புகுந்த வீடு இரண்டிலும் பொறுமைசாலி எனப்பெயர் எடுத்து, அடக்கமான பெண், இவளே எனும்படியாக அனைவரின் பாராட்டையும் பெற்றவள்.  கபிலன் ஏறக்குறைய இருந்தாலும் அதைப்பெரிதுபடுத்தாமல் அவள் குடும்பத்தை நடத்திப்போவதை அவர் அறியாதவரில்லை. “இந்த நல்லப் பெண் கட்டுக் கழத்தியாக மஞ்சள் குங்குமத்தோடு நெடுநாள் வாழவேண்டும்” என்று வேண்டுபவர் சிங்காரவேலர்.
நிருபர் சேதி கொண்டுவந்தாலும், இறந்தது கபிலன் தானா என்பதை ரயில்வே அதிகாரி ஒருவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு  உறுதி செய்துகொண்டு அதன் பின்னரே, வள்ளியம்மையைக் காண அவசர அவசரமாக விரைந்தார்.
துக்கச் செய்தியைக் கேட்டதும், வள்ளியம்மையிடம் ஒரு வித்தியாசத்தைப் பார்க்க முடிந்தது. மற்ற பெண்கள் போன்று தேம்பித்தேம்பி அழவில்லை. தன்னுடைய சகோதரியை அணைத்துக்கொண்டு ஒரு முறை ஓ என்று அழுது விட்டு, சுவற்றில் ஆணியில் மாட்டப்பட்டிருந்த சாவியைப்படக்கென எடுத்துக்கொண்டு  மட மடவென மாடிக்குவிரைந்து, பூட்டைத்திறந்து, உள்ளுக்குள் நுழைந்து  மாடிக்கதவை அடைத்துக்கொண்டு  விட்டாள். இதனைக் கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அனைவரும் அவள் ஆர்ப்பாட்டம் செய்வாள் அல்லது  துக்கத்தில் உறைந்து நிற்பாள் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அவளுடைய நடவடிக்கைகள் வேறு விதமாய் இருந்தன.
ஒரு வரவேற்பறை, ஹால், தனியறை, குளியலறை, கழிவறை எனக்  கச்சிதமான மாடிப்பகுதி. குடி, சூதாட்டம், கூத்தி என - கபிலனின் சாம்ராஜ்யக் களம் அது. வேலைக்காரி போல் சுத்தம் செய்ய மட்டுமே இவளைக் கூப்பிடுவான். கபிலனின் அந்தப்புரம் - இனி இவள் வசம.         
மாடி அறைக்குள் ஒரு நாற்காலியில் அமர்ந்தாள் வள்ளியம்மை. அக்கணம் அவள் தன்னுடைய உடம்பில் ஒரு புது உற்சாகத்தை உணர்ந்தாள். என்றைக்கும் திறந்திருக்கும் அந்த ஜன்னலிலிருந்து ஒரு மெல்லிய தென்றல் அவள் முகத்தினை வருடிச் சென்றது. பல நாட்கள் முன்பு குடுவையில் செருகி வைத்த மரிக்கொழுந்து துளிர் வாடாமல் இருப்பது புலப்பட்டது. . சமையலறை வாடையை மட்டுமே சுவாசித்த அவளது நாசிக்கு இன்று மழையின் மண் வாசம் சட்டென்று புலப்பட்டது. தன கணவனின் கட்டளைகளை மட்டுமே  கேட்டுச் சலித்த அவளது காதுகளுக்கு, இன்று “அம்மா! காய்” என்று கூவிச்செல்லும் தள்ளு வண்டிக்காரனின் கூவல் புதுமையாகக் கேட்டது. தூரத்து தொழிற்சாலையில் ஒலிக்கும் மணியோசை அவளுக்கு அமுதகானம் போல் கேட்டது. தன்னைச் சுற்றிலும் பல வண்ணங்களில் பட்டாம்பூச்சிக் கூட்டம் சிறகடித்துப் பறப்பது போன்று உணர்ந்தாள்.
ஜன்னலின் வழியாக வெளியே பார்த்தாள். வானில் கரிய நிறம் நீங்கி, வெள்ளை நிற மேகங்கள் கண்டாள் தன்னை வரவேற்பது உணர்ந்தாள். என்னே! ஒரு மகிழ்ச்சி. யாரிடமும் சொல்லமுடியாத ஒரு நெகிழ்ச்சி.
கட்டிலின் மீது தாறுமாறாய்க்  கிடந்த விரிப்பு, தலையணை, போர்வை என அனைத்தையும் எடுத்துக் கீழே வீசினாள். வெற்றுக் கட்டிலில் படுத்து, தன இரு கைகளையும் மடித்துத் தன்னுடைய சிரத்தின் கீழ் வைத்து கற்பனையில் மூழ்கினாள். சிவனுக்கு நஞ்சு தொண்டையில் நின்றது போல, வள்ளியம்மையின் சோகம் தொண்டயுடன் நின்றது. சிறுபிள்ளையாக இருக்கும்போது, தூங்குவதற்குக்கூட அழது ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று தன கணவன் இறந்து விட்ட செய்திகேட்டு ஒரு உணர்வுமில்லாமல் இருந்தாள்!
சிறு வயதில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்ந்தவள், கட்டுப்பாடுகளே வாழ்க்கையாக மாறி ஒன்றல்ல இரண்டல்ல பதினேழு ஆண்டுகள் கொத்தடிமையாக வாழ்ந்ததை உணர்ந்தாள். இம் என்றால் சிறைவாசம் ஏனென்றால் வனவாசம் என்பதாகப் போன வாழ்க்கையை எண்ணியபடியே  வானத்தை உற்று நோக்கிகொண்டிருந்தவள், திடீரென,  பல வண்ண வானவில் தோன்றி, தன்னை வெளிச்சத்திற்கு அழைப்பதைக் கண்டாள்.
பல நாட்களாக காத்துக்கொண்டிருந்த ஒன்றை இன்று திடீரென அடைந்துவிட்டது போன்றதொரு உணர்வு அவளுக்குள் எழுந்தது. ஆனால் அந்த “ஒன்று” எது? அதை விவரிக்க வார்த்தைகள் இல்லை அவளிடம். ஆனால் அது தன்னுடைய உயிரோடு உயிராகக் கலந்த ஒன்று என்பது மட்டும் புரிந்தது அவளுக்கு.
சிறுவயதில் அவள் கேட்டக் கதையில் நிகழ்ந்தது போல, வானத்திலிருந்து ஒரு அதிசயக் கம்பளம் அவளை வேறொரு உலகத்திற்கு கூட்டிச்செல்வதற்காக அவளை நோக்கிப் பறந்து வருவது போல அவள் உணர்ந்தாள், முல்லை அரும்புகள் குப்பென மலர்ந்து அந்த அறை முழுவதிலும் வியாபித்தது போன்று அவள் உணர்ந்தாள்.
அவளுடைய மார்பகங்கள் மாறி மாறித் துடித்தன. அவள் காத்துக்கொண்டிருந்த ஒன்று அவளை நெருங்கிவிட்டதைப்போல  உணர்ந்தாள். அதை வரவேற்றுத் தனதாக்கிக்கொள்ள அவளுடைய மனதைத் தயார்படுத்திக் கொண்டாள்.
உழைப்பு -- உழைப்பு -- உழைப்பு ஒன்றே வாழ்க்கையென --- உழைத்துக் களைத்து வறண்டு கிடந்த தனது இரண்டு கைகளையும் கண்டு வெட்கித் தலை குனிந்தாள். செருப்பாலும், கொம்பாலும், துடைப்பத்தாலும் தான் வாங்கிக்குவித்த தேக அடையாளங்களை எண்ணிப் பார்த்தாள். கண்கள் பிதுங்குமளவுக்கு மென்னியைப் பலமுறை கபிலன் நெறித்ததால் கூம்பிப்போன நெஞ்சுக்குழியைத் தடவி விட்டுக் கொண்டாள்.
குறையைத் தன்னிடத்திலே வைத்துக் கொண்டு, ‘கொட்டி மாடு’ என்று சொல்லிச் சொல்லி அவன் எட்டி எட்டி உதைத்த வயிற்றைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.   அந்த மறக்கமுடியாத தருணத்தில், அவளுடைய நா அவளுடைய அனுமதி இல்லாமலே, சில வார்த்தைகளை உதிர்த்தது, “விடுதலை!விடுதலை!விடுதலை!”
யாருமே இல்லாத அந்த அறையில் அவளுடைய கண்கள் யாரையோ உற்றுப் பார்த்தபடி இருந்தன. அவளது உடம்பில் ரத்த ஓட்டம் பல மடங்கு அதிகமானது. இருதயம் வேகமாய்த் துடித்துக்கொண்டே இருத்தது. அவளின் தலைக்குப் பின்னால் ஒரு ஒளி தோன்றியது, அது உடல் முழுவதும் பரவி அவளை சிலிர்க்க வைத்தது. அவளுடைய நரம்பு நாடிகளில் ஒரு புத்துணர்ச்சி பரவியது. .
தன்னை ஆட்கொண்டுள்ள இந்த புதிய உணர்வையும், அதனுடைய வலிமையையும் எண்ணி அவள் மெய் மறந்தாள். இது சாதரணமான ஒரு நிகழ்வல்ல என்பதை உணர்ந்த அவள், அதை மனதாரப் போற்றிப் புகழ்ந்தாள்.
நகராத கைகள், பொலிவில்லாத முகம், பஞ்சடைந்த கண்கள் எனும் தோற்றத்தோடு காணப்படும் இறந்தவரைப் பார்த்தால், பொதுவாக எவருக்கும் கண்ணீர் பாய்ந்தோடும் என்று அவளுக்குத் தெரியும். ஆனால், தன்னை என்றைக்குமே அன்போடு பார்க்காத முகம், அரவணைக்காத கைகள், அடிமை என்றே நினைத்துவிட்ட மனம் - இதுதான்  இன்று அவள் முன்னே ஒரு உணர்வும் காட்டாத ஒரு உயிரற்றப்  பொருளாக காட்சியளிக்கப் போகிறது. “அந்த ஜடத்தைப் பார்த்து நானும் எந்த உணர்வையும் காட்டக்கூடாது” என்று முணுமுணுத்துக் கொண்டாள்.
“ஆனால் இங்குள்ள கூட்டத்திற்காகவேனும் கொஞ்சம் அழவேண்டும்.” என்று சொல்லிக்கொண்டவள் “பிணம் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம்” என்று முடிவு கொண்டபடி சொல்லிக் கொண்டாள்
அதே கணம்  அவளுடைய எண்ணங்களை முன்னோக்கிச் செலுத்தினாள். வரப் போகின்ற வருடங்கள் அனைத்தும் அவளுடயதே, அவளிடமிருந்து அதைப் பறிக்க எவருமில்லை. இரு கரங்களையும் நீட்டி அந்த தருணங்களை வரவேற்றாள்.
வரும் காலங்களில், விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் தனிமையே அவளுடைய வாழ்க்கை. ஆனால் தனிமையிலும் ஒரு இனிமை, ஏனெனில் அது அவளுடைய வாழ்க்கை. அதைப் பறிக்க யாருமில்லை. அணையில்லா நதிபோல தான் நினைத்ததைச் செய்ய அவளுக்கு சுதந்திரம் உண்டு. பிறரின் அடிமைப் படுத்தும் ஆசைகளுக்கு இனி அவள் ஆளாகவேண்டும் என்பதில்லை. அடிமைப்படுத்தும் குணம் படைத்தவர்கள், அதை ஒரு குற்றமாக கருதாமல் அதை மரபாக கருதுவதை அவள் வெறுத்தாள்.
ஓரிரு குழந்தைகளாவது பிறந்திருக்கலாம். சொந்தம் எனச் சொல்ல! ஆனால் அவை அவனையே உரித்து வந்திருந்தால் எத்தனைக் கொடுமையாய் இருந்திருக்கும்? கொட்டி மாடு என எட்டி எட்டி உதைத்தானே அதுவே  மேல் என்றல்லவா ஆகியிருந்திருக்கும்?  
இத்தனைக் கொடுமைக்கிடையிலும் கபிலனை சில நேரங்கள் காதலித்ததை. அவளால் மறுக்க முடியவில்ல, ஆனால் அவனைக் காதலித்ததை விட அவனை வெறுத்த நேரங்களே அதிகம். பட்ட கஷ்டத்திகுப் பரிசாய் அவள் தற்போது அடைந்துள்ள பேரானந்தம் அளவிடமுடியாதது. எனவே கபிலனை அவனது மரணத்தோடு மறந்து விடுவது என முடிவெடுத்துவிட்டாள்.
“விடுதலை! உடலுக்கும் உள்ளத்துக்கும் இன்று முதல் விடுதலை!” என்று தனக்குள் மீண்டும் முணுமுணுத்துக் கொண்டாள்.
மாடியின் கதவை அடைத்துக்கொண்டு உள்ளே சென்றவள் என்ன செய்கிறாள் என்றறியாமல் வெளியில் உள்ளவர்கள் பயந்துபோயினர். சிந்தாமணி பதறிப்போய் கதவைத் தட்டினாள். பதிலேதும் வராததால், கதவின் சாவி துளையில் சிரமப்பட்டுப் பார்த்தாள். தற்கொலை செய்துகொண்டுவிட்டாள் என்று பதறி “வள்ளியம்மை! என்ன செய்கின்றாய் நீ! உன்னை வேண்டிக் கேட்டுக்கொள்கின்றேன் எனக்காக கதவைத் திற !” என்று வேண்டினாள்.
உள்ளிருந்து வள்ளியம்மை “நான் நன்றாகத்தான் இருக்கின்றேன்” நீங்கள் உங்கள் வேலையைப் பாருங்கள்” என்று கடுமையாகப் பேசினாள்.
உள்ளே நாற்காலியில் அமர்ந்த படியே வரப்போகின்ற மழைக் காலம், பனிக் காலம், இலையுதிர்காலம் மற்றும் வெயில் காலங்களில் தான் என்ன செய்வது என்று திட்டம் தீட்டிக் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்திற்கு பின், தானாக வந்து கதவைத் திறந்து கண்ணீர மல்க தன்னுடைய சகோதரியின் கரம் பிடித்தபடியே, மெதுவாகப் படிக்கட்டுகளில் இறங்கி, சிங்காரவேலனை நோக்கி நடந்தாள். அவரிடம் தனது கணவனின் மரணத்திற்குப் பிறகு, தான் எவருடனும் செல்லாமல், அந்த வீட்டிலேயே தனியாக வாழ்வதையே விரும்புவதையும், . எவரும் இவ்விஷயத்தில்  மாற்றுக் கருத்தைச் சொல்லி அவளை நிர்ப்பந்திக்காதபடி  பார்த்துக்கொள்ளுமாறு அவரிடம்  என்று சொல்லி வைத்துவிடவேண்டும் என்று நினைத்தாள். 
சிங்காரவேலனை நோக்கி அவள் நடந்துகொண்டிருந்த அந்த நேரத்தில் யாரோ ஒருவர் வீட்டின் வெளி கேட்டை, மெதுவாகத் திறந்து, விட்டிற்குள் நடந்து வந்தார். அவர் வேறு யாரும் இல்லை, கபிலன் தான்!!
வழக்கம் போன்று, அதே படாடோபம், மைனர் செயின், வலக்கையில் வாட்ச், கூலிங்  கிளாஸ், சிக்கென்ற டி ஷர்ட்  அணிந்து உள்ளே வந்த கபிலனை வள்ளியம்மை அப்படியே ஆச்சரியத்தோடு பார்த்தாள். எத்தனை அக்கிரமம் செய்தாலும், எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கொள்ளாத கபிலனின் ராசி அவளுக்குத் தெரியும்.  விபத்து நடந்த இடத்தில் அவன் இல்லை - தப்பி விட்டான் என்பது ஊர்ஜிதமானது. அவனிடம்  கேட்ட போது, அவ்வாறு ஒரு விபத்து நடந்தது என்பதைப் பற்றி கூட அறியாமல் இருந்தான். அனைவர் கண்ணிலும் இருந்த சோகத்தைக் கண்டு, விஷயத்தைப் புரிந்து ஏகத்தாலமாகச் சிரித்தான்.
வள்ளியம்மையின் காலுக்குக் கீழே பூமி சரிந்தது. அவளின் பின்மண்டையில் கிளம்பி நின்று கொண்டிருந்த ஒளி அவளது கண்களின் வழியே வெளியேறியது ஆம்புலன்ஸ் விரைந்தது, மருத்துவர்கள் குவிந்தனர். ஆனால் அவர்களால் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.  தன கணவன் உயிருடன் திரும்ப வந்ததின் இன்ப அதிர்ச்சி  தாள முடியாமல் வள்ளியம்மை  இறந்து விட்டதாக முடிவு செய்தனர்.  

     

Friday, June 3, 2011

கணநேரத் துல்லியம்: படம்பிடிக்கும் கலை; அற்புதப் படைப்பாற்றல்

கணநேரத் துல்லியம்: படம்பிடிக்கும் கலை: அற்புதப் படைப்பாற்றல் 

உயர்திணைப் பொருட்களைப் படம்பிடிப்பது என்பது  சுலபமான செயல் அல்ல. உயிருள்ள ஜந்துக்கள் இயங்கும்போது  அவற்றின் அதிசய  நிலைகளைப் பம்பிடிப்பது என்பது பிரம்மப் பிரயத்தனம் தான். ஒரு படம்பிடிக்க, மணிக்கணக்கில் நாள் கணக்கில் தவமிருக்க வேண்டும்.

.சென்னைப் பேராசிரியர் இராஜா கணேசன் அவர்கள், தனக்கு துரைராஜ் கோவிந்தராஜ் அவர்கள் அனுப்பிவைத்திருந்த  வண்ணப்படங்களை எனக்கு அனுப்பி வைத்திருந்தார். அவற்றை உங்களுக்காக இங்கே இணைக்கிறேன், ஒவ்வொன்றிற்கும் ஒரு தலைப்பு தந்தது மட்டும் என் உபயம்.  

பட்டுப்  பூச்சிக்கும் வண்ணாத்திப் பூச்சிக்கும் வித்தியாசம் தெரியாதா எனக்கு? 
சிறகில் உமை மூடி - அருமை கதை கூறி - உறங்கவைத்தேனடா!!
போட்டோ எடுக்கறான்! திருஷ்டி பட்டுடப் போகுது - டக்குன்னு வாங்கிக்க!! 

  என்னை தூக்கிட்டுப் போற மாதிரி அவனுக்கு நெனப்பு!! ஆனா அவன நான் தானே சுமந்துகிட்டுப் போறேன்?
யோகாவாம்! குண்டலினியாம்! தளர்வுப் பயிற்சியாம்! தியானமாம்! ஜிம்மாம்!! ஏனுங்க இப்படி காசைக் கரைக்கிறீங்க? சும்மா ஒரு திட்டு மேல காலையும்  கையையும் கிளப்பிப் போட்டு மூஞ்சத் தொங்கப் போட்டுக் கவுந்து படுங்க!
"மூலாதாரத்தின் மூண்டெழு கனலை" வளப் படுத்தும் கலை  இதுதாங்க!
முற்றும் துறந்த இந்த ஞானி சொன்னாக் கேட்டுகிடணும்  
       

அழகே! ஆபத்து!!பின்னாலப் பாக்காமச் சிட்டெனப் பற!!

நாவால் நக்குது ஓட்டச்சிவிங்கி, தானும் நன்றாய்க் காட்டுது  பெட்டை அணில்!

மேல  ஏறிச் செய்யற வேலையை நம்ம  கிட்டக் கொடுத்தா என்ன? கீழ  தான் ஏகப்பட்ட லேபர் ப்ராப்ளம் இருக்கே!




 என்ன பாக்கறே? தப்பிக்கமுடியாது கண்ணு! ராவணன் சீதையத் தூக்கினக் கணக்கா கபால்னு அள்ளி வந்தது விடறதுக்கா? 


பச்சோந்தின்னு நம்மளைப் பார்த்துப் பேசறது - இவனுகளைப் பார்த்துதான நாம  இந்த   டெக்னிக்கக்  கத்துக்கிட்டது!
எங்களை ரேசுல  ஜெயிக்க உங்களால முடியுமா?

இதுக்கெலாம் கொடுத்து வைக்கணும்? இந்த ஜென்மத்துல மட்டுமில்ல எந்த ஜென்மத்துலேயும் உமக்கு இந்த சுகம் கிடைக்காது! 
நிற்பதுவே! நடப்பதுவே!! பறப்பதுவே!!! நீங்களெல்லாம் அற்ப மாயைகளோ? உமக்குள் ஆழ்ந்த பொருளில்லையோ?  
நத்தை மடி மெத்தையடி!


ஏய்! ஒன் வாயில இருக்க மசால் வடையக் கொஞ்சம் குடு! ஒரு கடி கடிச்சிட்டு கொடுத்தடறேன்! ஒன்ன ஒன்னும் செய்ய மாட்டேன்! ப்ராமிஸ!!
ஒங்கள்ள பல பேர் எங்கள மாதிரித்தான் பாக்கறாங்க! ஆந்தைப்  பார்வைனா கொத்திக் கொதறிடுவோம்.


இனி நீயின்றி நானில்லை! நானன்றி  நீயில்லை! வா கண்ணே! எனக்குள் ஐக்கியமாகு! ஈருடல் இணைய ஓருயிராவோம்   


மொதல்ல பேடன்ட்டுக்கு அப்பளை பண்ணனும்! நம்மளைப் பார்த்து "புக்திமான்"கிற பேர்ல ஒரு கேரக்டர் ரெடி பண்ணிட்டு, சொந்தமா  எதையோ புதுசா உருவாக்கின மாதிரி தம்பட்டம் அடிச்சிப்பானுக!  

 உமக்குப் பிடித்த மீனுடன் இந்த ஒய்யார வளைவில் உமக்காய்க் காத்திருக்கிறேன் நாதா!!


குதிரை பறக்கற மாதிரி படம் போடுவானுங்க! ஆட்டுக்குட்டினா இளக்காரம்?
கொஞ்சம் அந்தக் குதிரையை ஒண்டிக்கு ஒண்டி வரச்சொல்றது!
நாம  பறக்கிற பறப்புல, அது நொண்டிக் குதிரையாகுமா   மொண்டிக் குதிரையாகுமான்னு பாத்துடுவோம்!!      



நாயே வெல்லும்! முயல் தோற்கும்!! 


வாசெல்லம்! பயப்படாமக் குதி! பாட்டி அப்படியே வாயால ஒன்ன வாங்கிகறேன்!!!   



தும்பியப் பிடிச்சது வாட்டமாப் போச்சு! ஏரோப்ளேன் வேகத்துக்குப் பறக்க முடியுது!! 

மஞ்சள் நிலாவுக்கு இன்று ஒரே சுகம்! இது முழு நிலவு! இது முழு நனவு!!  இந்த மரமோ துளிர் விடுக்கும்! நான் மீண்டும் குடி பெயர்வேன்!!!! ம்ம்ம்ம்ம்ம்ம் ---    


முகத்தில் முகம் பார்க்கலாம்! 



அழகையும் தெறமையையும்  வெளிப் படுத்தணும்னு நீங்க சொல்லிக் கேள்வி! 
நீ விரிவதற்காய்த் தவமிருப்பேன்! உன் மடிவிரிப்பில் பதுங்கிடுவேன்!!
 ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்  தன் பிள்ளை தானே வளரும்

Monday, May 30, 2011

வடிவுக்கரசி: நடித்தலில்லா நடக்கை

வடிவுக்கரசி: நடித்தலில்லா நடக்கை  

எனக்கும் வடிவுக்கரசிக்கும் என்ன பூர்வஜெனம் பந்தமோ தெரியாது. ஒரு கால கட்டத்தில் அவரும் நானும் எப்படியேனும் சந்த்தித்து விடுவோம். குசலம் விசாரித்துப் பேசுவோம். விடைபெறுவோம். ஆனால் எந்த ஒரு சந்திப்பும் திட்டமிடப்படாதது. எதேச்சையாக மட்டுமே  நிகழ்ந்தது. 

எனது பள்ளிப் பருவத்தில் இராணிப் பேட்டையில் அவரை முதன்முதலில் சந்தித்தேன். வாலாஜா அறிஞர் அண்ணா பெண்கள் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கிறார். அந்த சமயம் நான் எனது பாட்டி வீட்டுக்குச் சென்றிருக்கிறேன். 

பக்கத்து வீட்டில் ஏகப்பட்ட கலாட்டாவாக இருந்தது. எக்கச்சக்கமான வால்யூமில் ஆங்கிலப் பாடல், அதற்கேற்றார்ப்போல இளம்பெண்கள் அரைகுறை உடையில் நாட்டியம் எனத் தெருவே அதிர்ந்த கதையாய் அங்கு ஒரு சத்தம். 

என் பாட்டி வீட்டு ஜன்னல் வழியாக அடுத்தவீட்டை ஆர்வத்துடன் நோட்டம் விட்டுக் கொண்டிருந்தேன். பாட்டி ஒரு அதட்டல் போட்டார். "அந்த அறுதல்களைப் பார்த்தைய்னா, ஒனக்கும்  மரை கழண்டு, கிறுக்குப் பிடிக்கும். ஜன்னலை மூடு. ஸ்ரீரங்கத்து ஒலக்கை மாதிரி ஒருத்தி இருக்காப்பாரு அவ தான் இதுகளுக்கு லீடர். பட்டண த்துலேந்து வந்து அவ இங்க பண்ற ரவுசு தாங்கல"

நான் ஜன்னலை மூடும் முன் கடைசியாக அந்தப்பெண்ணைப் பார்த்தேன். நெடு நெடு வென வாட்டம் சாட்டமான பெண்.  ஸ்ரீரங்கத்து உலக்கையை நான் பார்த்ததில்லை. பாட்டி சாடிய பெண் அவள் தான் என்று மட்டும் புரிந்தது. உயரத்திற்கேற்ற   பருமனா  அல்லது பருமனுக்கேற்ற உயரமா என்று 
புரியவில்லை. கருப்பு நிறம். அச்சசல் ஆண் உருவம். டி ஷர்ட்டில் பிதுங்கிய எடுப்பான மார்பகங்கள் மட்டுமே பெண் என்று சொல்லின. 
ஜன்னலை மூடினாலும் அவள் உருவம் மட்டும் மனதிலேயே நின்றது. 
அடுத்த நாள் கோயில் சென்று திரும்பும்போது வாசலில் நின்றுகொண்டிருந்தாள். அவள் வாசலை நான் தாண்டும்போது என்னை அழைத்தாள். அறிமுகம் செய்து கொண்டாள். என்னைப் பற்றி அறிந்துகொண்டாள்.

சென்னையில் எனது வீட்டுக்கு அருகில் அவளது தாத்தாவின் பங்களா  இருப்பதைக் கூறினாள்.   எனது முகவரியை வாங்கி கொண்டாள். வீட்டிற்குள் நுழையும்போது ஒரு குற்ற உணர்வாக இருந்தது. பாட்டியிடம் அனுமதி வாங்காமல் அப்பெண்ணிடம் பேசியிருக்கக் கூடாது என்று தோன்றியது. . அதுவும் முகவரி தந்தது பாட்டிக்குத் தெரிந்தால் வானத்துக்கும் பூமிக்கும் அல்லவா குதிப்பார் பாட்டி!  நல்ல காலம் பாட்டி அடுக்களையில் பிசியாக இருந்தாள். பாட்டியிடம் சொல்லிவிடவேண்டும் என்று நாக்கு துடித்தது. ஆனால் அப்பெண்ணை பாட்டி வைவதைக் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை.

வாலாஜா கல்லூரியில் ஆண்டுவிழா எனது உறவுப்பெண் ஒருத்தி என்னை அழைத்துச் சென்றாள். அங்கு வடிவைப் பார்த்தேன். மேக் அப் சகிதம் தனது  குழுவுடன் தயாராகிக் கொடிருந்தார். ஒரு ஆங்கில நாடகம் அவர் இயக்கத்தில் .அரங்கேறப் போகிறது. 

என்னைப் பார்த்த மட்டில் ஓடிவந்து அழைத்துச் சென்றார். "இதப்பாரு உண்மையைச்  சொல்லட்டுமா? நானே ஒன்ன இன்வைட் பண்ணனுன்னு நெனச்சேன். ஒங்க பாட்டியப்பாத்தா எனக்கு பயம். சாரி!!

சரி! எனக்கு ஒண்ணு  சொல்லு!
ஒவ்வொருத்தருக்கும் ஒரு தெறமை இருக்கும். எனக்கு டிராமா, பாட்டு --- நீ என்ன செய்வ? 

நானா? 
நல்லா பேசுவேன்! எந்த தலைப்பு கொடுத்தாலும் சமாளிப்பேன்!

இன்னொரு பெண் ஓடி வருகிறாள். ஏய் வடிவு அந்த தலப்பா பொயட் - யாரு அவரு இப்ப இருந்தா நம்பளப் பாத்து என்ன சொல்லுவார்னு பேசச்சொல்லு.

பேசுகிறேன் ---

"ஆணைப் போல் உடையணிந்து ஆணுக்குப் பெண் நிகரெனக் காட்டி சுற்றித் திரிந்தலையும் ஹிப்பிகளாய்ப் பிறழ்வதற்கோ உமக்காய் மன்றாடினேன் - போராடினேன்?" -- எனது  கர்ச்சிப்பு

அத்தருணம் வடிவின் கண்களில் நீர்ப் பனித்ததை அறிந்தவர்கள் நானும் வடிவும் மட்டுமே.            

அடுத்தடுத்து ஏ பி நாகராஜன் தோட்டத்திற்கு வரும்போதெல்லாம் என்னைப் பார்க்க நேரிடும் வடிவு. நான் எஸ் ஐ இ டி கல்லூரியில் படிக்கும்போது, சாலையில் நான் நடந்து செல்ல - திடீரென என் பக்கத்தில் காரை நிறுத்தி விசாரிக்கும் வடிவு -   

நந்தனம் டவர்ஸ் அருகில் நான் ஒரு நாள் டூ வீலரில் போக, என்ன என்ன ஓவர் டேக் பண்ணப் பாக்கறியா? என்ற மிரட்டலுடன் கேட்டுவிட்டுப் போன வடிவு.

கள்ளம் கபடமில்லாமல் மிக எளிமையாக நடந்துகொள்ளும் வடிவு.

ஆங்கில உச்சரிப்பிலும் புலமையிலும் தூள் கட்டும் வடிவு.

என்னை விட வயதில் மூத்தவர்  எனினும் மரியாதை தந்து எட்டத்தில் வைக்க முடியாத வடிவு.

நிறைய படிக்க வேண்டும் என்று உள்ளுக்குள்ளே ஓராயிரம் கனவுகள் வைத்திருந்த வடிவு.

இயற்பெயருடனேயே நடிக்க வந்த வடிவு.


திரைப்படத்துறையோடு தனக்குப் பரம்பரைத் தொடர்பு இருந்த போதிலும் அலட்டிக்கொள்ளாத வடிவு. 
நடிப்புகலவாத நடக்கை கொண்ட வடிவு.
 
நான் சந்தித்துப் பழகிய பெண்களுக்குள் என்னை அதிகம் சிந்திக்கவைத்த வடிவு. 
இக்கணம் என்னுள் எழும் வாசகம்: "ஆயிரம் கோடி மலருண்டு - அவளோ அபூர்வ  ஒற்றைச் சம்பங்கி!"
 

 
 
    

       



 


         

Sunday, May 29, 2011

ஓடம் நதியினிலே! ஒருத்தி மட்டும் கரையினிலே!!

ஓடம் நதியினிலே! ஒருத்தி மட்டும் கரையினிலே!!
  
ஜார்ஜியா மாநிலத்தையும் தென் கரோலினா மாநிலத்தையும் பிரிப்பது போல ஓடும் சவானா நதி  - படகுப் போக்குவரத்துக்குப் பெயர் போனது. வணிகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு படகுகள் வந்து போவதும். சுற்றுலாப் படகுகள் உல்லாச உலா வருவதும் கண்கொள்ளாக் காட்சி. இப்படகுப் போக்குவரத்தைப் பார்க்கும்போது, சென்னை பக்கிங்காம் கால்வாயில் படகுப்போக்குவரத்தை நாம் பாதுகாத்துப் பராமரித்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைக்கும்.

ஆந்திர மாநிலம் வழியாக ஒரிசா உள்ளிட்ட வடமாநிலங்களுக்கும் தமிழகத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தித் தந்த  பக்கிங்காம் கால்வாயில், உப்பு வாணிகம் வெகு ஜோராய் நடந்ததாகப் படித்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் அந்தக் கால்வாயைப் பார்க்காமல் நான் எங்கும் செல்ல முடியாது - அடையாறு நமது பேட்டை. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக அந்தக் கால்வாய் ஆக்கிரமிப்புக்களால், குறுகிப் போனதும், குப்பைக்கூளங்களால் அடைசல் கண்டு போனதும், மாடி ரயில் வந்ததால் ஒட்டுமொத்தமாய் மேடிட்டுபோனதும் நானறிந்தவை.
     

இங்கு சவானா நதியைப் பார்த்த மாத்திரம், இதே போன்ற ஆழமும் இதே போன்ற அகலமும் தானே நமது பக்கிங்காம் கால்வாய்க்கும்!! அதைக்  காப்பாற்றத் துப்பில்லாமல் விட்டுவிட்டோமே என்று மனம் நொந்து வெந்து போனது. 
சவானா நதி அத்தனை அழகாய் இருக்கிறது. நதியின் கரை சென்னையின் மெரீனா கடற்கரையை நினைவுபடுத்துகிறது. கரை நெடுகிலும் சிலைகள். மண்ணின்  மணத்தையும் மானத்தையும் ஒருங்கே பறை சாற்றும் சிலைகளின் அணிவகுப்பு இங்கே!!

அவற்றுள்  பிளாரன்ஸ் என்ற பெண்ணின் சிலை பற்றிக் குறிப்பிட்டாக வேண்டும். சவானா நதியின் மீது பயணம் போன தனது காதலனின்  வரவை எதிர்ப்பார்த்தபடி   கரையின் மீது காத்திருக்கும் பிளாரன்ஸ், தான் நிற்கும் இடம் காதலனுக்குத் தெரியவேண்டுமென்பதற்காக தனது துப்பட்டாவை  வீசுகிறாள். 
ஆனால், வந்த படகில் காதலன் இல்லை. 

இனி வரப்போகும் படகுகளில் காதலன் வருவான் என நின்ற இடத்திலிருந்து துளியும் நகராமல்,  துப்பட்டாவை வீசியபடி நிற்கிறாள் பிளாரன்ஸ். அவள் இவ்வாறு நாற்பத்து  நான்கு ஆண்டுகள் நின்றது சரித்திரம் காட்டும் சான்று, 

ஓடங்கள் நதியினில் ஓட, தான் மட்டும் ஒருத்தியாய், தூக்கிய கைகளில் வீசிய சீலையும், ஒத்தாசைக்கு ஒரு நாயுயமாக இரவும் பகலுமாககே காதலனுக்காய்க் காத்த்திருக்கிறாள் பிளாரன்ஸ். இக்காட்சி காண்பவர் மனதைப் பிசைகிறது.     

ஆடாது அசையாது  நிற்கும் பிளாரன்ஸ்  சிலையைக் காணும்போது "ஓடம் நதியினிலே -- "ஒருத்திமட்டும் கரையினிலே" என்ற பாட்டை நம் வாய்  முணு முணுக்கும்.