எனது வண்ணப்படப் பேழையில்: சின்னி ஜெயந்த்தும் நானும்
சென்ற ஆண்டு, அட்லாண்டா மாநகரத்திற்கு, தனது குடும்பத்தோடு வருகை தந்திருந்தவர். அவரது நகைச்சுவைச் சொற்பொழிவில் சிரிப்ப்போ சிரிப்பென்று சிரித்துச் சிலிர்த்த கையோடு, அவரைச் சந்தித்து, சிந்தனைப் பரிமாற்றம் செய்துகொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. எளிமை, ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் தன்மை ஆகியன புலப்பட்டன. ஒருமாபெரும்கூட்டத்தை வயிறு வலிக்கும் அளவுக்குச் சிரிக்க வைப்பது என்பது சுலபமான வேலையில்லை. சிலருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்த சிரமமான பணியை வெகுசிறப்பாகச் செய்துகொண்டிருக்கிற சின்னி ஜெயந்த்தின் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன். மனைவி மக்களுடன் இவர் பல்லாண்டு வாழ்கவென இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
அவ்வைமகள்
0 comments:
Post a Comment