ஏலாதி கூறும் அன்புடையோர் கொள்ளும் ஆறு குணங்கள்
ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு என்ற பிரபலத் திரைப்படப் பாடலை நாமறிவோம்.
இந்தப் பாடல் போன்றே சுவையும் எளிமையும் நிறைந்த ஏலாதிப்ப்பாடல் ஒன்று உண்டு. இதோ பாருங்கள்!!
சாதல் பொருள் கொடுத்தல் இன்சொல் புணர்வுவத்தல்
நோதல் பிரிவில் கவறலே -- ஓதலின்
அன்புடையார்க்(கு) உள்ளன ஆறு குணமாக
மென்புடையார் வைத்தார் விரித்து
ஒருவர் பால் அன்பு மிகக் கொண்டு நட்புடன் வாழ்பர்கள் ஆறு குணங்களைத் தன்னகத்தே கொண்டவராக இருப்பார் என்று சான்றோர் விரித்துரைத்திருப்பதாகக் கணிமேதையார் கூறுகிறார். கேளுங்கள்!!
நண்பர் உயிர்துறந்த காலை தானும் உயிர் துறத்தல்*; நண்பருக்கு வறுமை வந்தகாலை பொருள் தருதல், நண்பர் துன்புறுங்காலை, ஊக்கச் சொற்களைப் பேசி தைரியம் கூறுதல், இயலும் வகையிலெல்லாம் நண்பருடன் கூடிப்பேசி மகிழ்தல், நண்பரின் துயரத்தில் பங்கு கொள்ளுதல், பிரிவு ஏற்படுங்காலை உள்ளம கலங்குதல் ஆகியன.
*சோழ மன்னர் கோப்பெருஞ்சோழரும், பாண்டிய அரசவைப் புலவரான பிசிராந்தையாரும் ஒருவரை ஒருவர் காணாமலேயே அன்பும் நட்பும் கொண்டிருந்தனர் எனவும், பிசிராந்தையார் இறந்துவிட, கோப்பெருஞ்சோழர் வடதிசை நோக்கித் தவமிருந்து உணவறுத்து உயிர் துறந்தார் எனத் தமிழ் இலக்கியம் சான்று காட்டுகிறது.

0 comments:
Post a Comment