Showing posts with label Avvaimagal. Show all posts
Showing posts with label Avvaimagal. Show all posts
Saturday, July 23, 2011
சோதனை தொடங்கியதே தேவி - கவிதை - அவ்வைமகள்
சோதனை தொடங்கியதே தேவி!!
சோதனை தொடங்கியதே தேவி இருள்
போர்வையைக் களைந்து நீ தூர எறிந்திடு!
பூமலர் இதயத்திலே கொடும் முள்கவை
நெருடுதே நீக்கிவிடு தேவி!!
மலருக்குள் வாசம் வைத்தாய் இந்த
மனிதரின் நெஞ்சில் ஏன் நஞ்சை வைத்தாய்?
தேனிலே இனிப்பை வைத்தாய் ஆனால்
மனிதரின் நாவிலேன் நெருப்பை வைத்தாய்?
பஞ்சிலே மெத்தை ஒன்று அதில்
பதுமை போல்மழலையாய் உறங்கி வந்தேன்
பெருந்தீக்கதிர் சுற்றிலும் எழுகின்றதே தேவி!!
திருக்கரம் நீட்டி எனைக்காத்துவிடு
அவ்வைமகள்
Labels:
Avvaimagal,
Goddess,
Prayer,
Tamil poem
Subscribe to:
Posts (Atom)

