அன்னைக்கு வணக்கம்
இயற்கைக் கொடைஎன்பர்
இறைவன் அருளென்பர்
பிறப்பின் ஊற்றென்பர்
பிறவிப் பயனென்பர்
பாசப்பேழைஎன்பர் விசு
வாசக் கோட்டைஎன்பர்
பேசும் தெய்வமென்பர்
நேசக் குன்றென்பர்
அணை இவளென்பர்
அரண் இவளென்பர்
அன்பு இவளென்பர்
அமைதி இவளென்பர்
ஆற்றல் இவளென்பர்
தேற்றல் இவளென்பர்
உறுதி இவளென்பர்
ஊக்கம் இவளென்பர்
இரக்கம் இவளென்பர்
நெருக்கம் இவளென்பர்
தியாகச் சுடரென்பர் மனந்
திரியா மாதென்பர்
ஈகை இவளென்பர்
ஈங்கிவளிலதுயாதென்பர்
மொத்தம் இவள் என்றே
சித்தம் மகிழ்ந்திடுவர்
காலக் கோட்டைகளில்
கலையா பந்தமென்றே
ஏத்தும் ஒரு உறவு
தோத்திரம் செய்குவமே!!
0 comments:
Post a Comment