Subscribe:

Pages

Tuesday, November 22, 2011

தாடி வேந்தர்கள்! பரிணாமத் தந்தையர்கள்!!


டார்வினும் அரவிந்தரும்



Darwin rsbl.royalsocietypublishing.org
aurobindo barbarapijan.com


நாடா? மொழியா? திசையா? சமயமா?  இவை யாவும் வெவ்வேறாகினும்  இருவருக்கும் இரண்டு ஒற்றுமைகள்:

இருவருமே தாடி வேந்தர்கள்!!
இருவருமே பரிணாம வளர்ச்சித் தத்துவத்தை உருவாக்கிய
சிந்தனைச் சிற்பிகள்!!  

தோழமையில் வல்லினமும் புள்ளினமும் - குழந்தை இலக்கியச் சிந்தனைகள்

govikanna.blogspot.com

யானைகள் பாடும் பாப்பா பாட்டு: குழந்தை இலக்கியச் சிந்தனைகள் 
 
தோழமையில் வல்லினமும் புள்ளினமும்   -

அன்னம்  - கொக்கு - நல்ல நாரை!
இவை யானைகட்குத் தோழரடி பாப்பா!!  

என யானைகள்  பாடுவதுபோல் தோற்றம் தரும் இந்த அரிய வண்ணப்படம் -
தோழமை என்று வந்துவிட்டால் எவரே பெரியவர்? எவரே எளியவர்? எனக் கேட்கிறது!!

"Parenthood" எனப்படும் பெற்றோர் கடமையை இந்த யானைகள் செவ்வனே செய்கின்றன!! குழந்தைகட்கு சமுதாயச் சிந்தனையை  முதலில் போதிக்கவேண்டியது பெற்றோர்கள் தாமே!!    காலுக்கடியில் ஒளிந்தபடி பெற்றோரின் விளையாட்டைக் கவனிக்கும் அந்த யானைக்குட்டிகளுக்கு - பய உணர்ச்சி  விலகி - முன்வந்து  - பிற உயிரினங்களுடன் தோழமை காட்டும் தைரியமும் - பண்பாடும் - கடமையும் இயல்பாகவே உருவாகுமன்றோ !!

யானைகட்கும் அன்னப் பறவைகட்கும்  இடையே உள்ள இந்த நட்பார்வம் ஒரு ஆத்மார்த்தத் தோழமை என்பதை யானைகளின்  கண்களில் வெளிப்படும் களிப்பிலிருந்து மட்டுமா காண்கிறோம்?  அன்னப் பேடைகளின்
சிங்காரத் தோரணையிலும் அல்லவா இந்தத் தோழமை வெளிப்படுகின்றது? 

குட்டிக்கரணம் போட்டுப் புரண்டு விளையாடி - யானையின் ஸ்பரிசத்திற்கும் - குறும்புக்கும் இலக்காகும்  மூன்று  அன்னங்கள்  - யௌவன கர்வத்தோடு - யானை கெஞ்சட்டும் எனக் கொஞ்சம் பிகு பண்ணிக்கொள்ளும் மற்றொரு அன்னமுமென  - இந்தக்  காட்சி - இறைவனின் படைப்பில் - விந்தையும் விசித்ரமும் ஒன்றா இரண்டா என  நம்மை மீண்டும் சிந்திக்க வைக்கின்றது!!

இத்தருணத்தில், ஒரு பிரபலமான குழந்தைப் பாட்டு நினைவுக்கு வருகிறது!

ஆனை ஆனை

அழகர் ஆனை


அழகரும் சொக்கரும்


ஏறும் ஆனை


கட்டுக்கரும்பை


முறிக்கும் ஆனை


காவேரித் தண்ணியைக்


கலக்கும் ஆனை

கட்டுக்  கரும்பை

பறிக்கும் ஆனை


தெருவெல்லாம் சுற்றி


ஓடும் ஆனை


குட்டி ஆனைக்குக்


கொம்பு முளைச்சுதாம்


பட்டணமெல்லாம்


பறந்தோடிப் போச்சாம்
---
இப்பாடலின் கற்பனை  வளம் பாராட்டுக்குரியது!!

கனமான யானைக்குட்டிக்கு - பறக்கவேண்டும் என்கிற ஆசை வருகிறது என்றால் - அது சும்மா வந்து விடாது -  வலிய விலங்குகளான யானைகள் - மெல்லினங்களான புள்ளினங்களோடு நட்பு கொண்டு - சேர்ந்து விளையாடிக் கூடி வாழும் சமூக உறவுகளால் மட்டுமே சாத்தியமாகும்!!

மனிதர்களிடையே  குடிமை - கூட்டுறவு - சமரசம் ஆகியவை இன்றியமையாதவை -  இவற்றைப் போதிப்பது என்பது கல்வியின் அடிப்படைக் கடப்பாடு!! இப்பண்புகள் - குழந்தைப்பருவத்திலேயே விதைக்கப்படாலன்றி - முழுமையான பயன் தரா!! இவ்வகையில் குழந்தை இலக்கியங்கள் மிகுந்த கவனத்தோடு படைக்கப்படவேண்டும் என்பதை படைப்பாளிகள் எவருமே கருத்தில் கொள்ளவேண்டும். 

சரி - சரியான வகையிலே குழந்தை இலக்கியத்தைப் படித்துவிட்டால் மட்டும் போதுமா? அது குழந்தைகளைச் சென்று  அடைந்துவிடுமா? - என்றால் "இல்லை."  

ஏனெனில்  - குழந்தைகளுக்கும் குழந்தைகள் இலக்கியத்திற்குமிடையே பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் வழிமறித்து நிற்கிறார்கள்!!
இந்த மூவரின் பலம்/பலவீனம் - பொறுப்பு/பொறுப்பிலாப் போக்கு ஆகியவற்றால் மட்டுமே  - குழந்தை இலக்கியத்தின் பயன்பாடு அமையப் பெறுகிறது.

குழந்தை இலக்கியங்கள் மிகச் சரியான வழியிலே குழந்தைகளைச் சென்று சேரவேண்டுமென்றால் -  பெற்றோர்களும் - ஆசிரியர்களும் - கொஞ்சம் கூடுதல் சிரத்தைஎடுத்து - இலக்கியம் கூறும் - கூறவரும் சேதியைச் சிந்தாமல் சிதறாமல் - பொத்தி எடுத்துக் குழந்தைகட்கு வழங்கவேண்டும் என்பது அடிப்படை.     

இந்த போதனா முறையிலே - சிறப்பான வண்ணப்படங்கள் - மிகச்சரியான எடுத்துக் காட்டுக்கள் - தேர்ந்தெடுத்த வாசகங்கள் - போதிப்பவரின் குரல் - தொனி - முகபாவனைகள் - உடல் அசைவுகள் - ஊடகங்களின் வலிமை - சார்பு ஆகியன முக்கியமானவை.     

குழந்தைகள் மனிதகுலத்தின் வித்துக்கள் என்ற அசைக்க முடியா விதியை மனத்திலே பதியவைத்தபடி பெற்றோரும் - ஆசிரியர்களும் - ஊடகங்களும் செயல்படுவரேயானால் -  நம் நாடு என்னும்  தோட்டத்தில் நாளை மலரும் முல்லைகளாக  நம் குழந்தைகள் - நல்ல குழந்தைகளாக  - வல்லக் குழந்தைகளாக உருவெடுப்பது நிச்சயம்!!   

சுதந்திரம் என்பது எதுவரை? - மூக்கு கடிபடும் வரை!!

 சுதந்திரம் என்பது எதுவரை? - மூக்கு கடிபடும் வரை!! 


அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பது பலரது வாடிக்கை -
இத்தகைய குணாதிசயத்தால் அவர்கள் பிறருக்குப் பல இடைஞ்சல்களை ஏற்படுத்திவிடுகிறார்கள்.  சுட்டிக்காட்டினாலும் கூட இவர்கள் புரிந்து கொள்வதில்லை - திருத்திக் கொள்வதில்லை!! வெளிநாடுகளில் வாழும் நிலையில் கூட  நம்மவர் பலபேர் இந்தப்பிழையை வெகு இயல்பாகச் செய்து விடுகிறார்கள்!! 

இவ்வாறு  மற்றொருவர் விஷயத்தில் ஆனந்தமாய் மூக்கை நுழைக்கிற  ஒருவரின் மூக்கு  அடுத்தவர் வாயில் அகப்பட்டுக் கொள்வதை  இந்த வேடிக்கைச் சித்திரம் காட்டுகிறது!!

அடுத்தவர் விஷயத்தில் மூக்கை நுழைப்பவர்களை இனி கண்டிக்காதே! கடி!! என்று சொல்லாமல் சொல்லுகிறதோ இந்த சித்திரம்!!
   
"The right to swing my fist ends where the other man's nose begins." 

                                                                                                                                       Oliver Wendell Holmes, Jr.




Monday, November 21, 2011

சினம்: ரௌத்ரம் பழகு என்று சொன்னால் தான் என்ன? இப்படியா பெண்கள்?

சினம்: ரௌத்ரம் பழகு என்று சொன்னால் தான் என்ன? இப்படியா?  
பெண்கள்  கோபப்படக்கூடாதாஎன்ன?  "ரௌத்ரம் பழகு!" என்று பாரதியே சொல்லிவிட்டுபோயிருக்கிறானே! என வரிந்துகட்டிப் பேசும் பெண்களின் எண்ணிக்கை மிகுந்து வருகிறது என்பதை  இப்புத்தக அட்டை காட்டுகிறது.

அதிகரித்துக் கொண்டே வரும் பெண்களின் கோபத்திற்கு என்ன காரணம்?

 பெண்களுக்கு-எதிரிடையான சூழல்கள் பெருகிவருகின்றன!!
 உண்மை -
இருப்பினும் -
இச்சூழல்களில் முக்கால் பாகம் இவர்களில் மீது திணிக்கப்படுவது என்றாலும் கால் பாகம்  இவர்களாகவே வரவேற்கும் பிரச்சனைகள் தாம்!!

மேலும், பிரச்சனைகளை சரியாக அணுகத் தெரியாமலும், பிரச்சனைகளை கவனமாக முன்கூட்டியே தவிர்க்கத் தெரியாமலும் பல பெண்கள் சிரமப் படுவதும்   புரிகிறது.

தமிழகத்தில் மட்டுமல் - இந்தியாவில் மட்டுமல் - உலகெங்கிலும் - பெண்களின்  உடல் நலமும் - உள நலமும்   - நலிந்துவருவதாகப் பேசப் படுகிறது. அதே நேரத்தில், ஆடை அணிகலன் அலங்காரங்கள் மிகுந்து பெண்கள் நாகரீகம் என்ற பெயரில் ஆபாசங்களை - பெண் தர்மத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தாமே முன்வந்து அரவணைத்துக் கொள்ளும் போக்கும் வளர்ந்து வந்திருக்கிறது!!

இந்நிலையில் இன்றைய பெண்களின் நிலையைப் பார்த்தால் வள்ளுவப் பெருமானின் வாக்கு நினைவுக்கு வருகிறது:

நுண்மான் நுழைபுலம் இல்லான் எழில்நலம் 
மண்மான் புனைபாவை யற்று "

(இதில்  ஆண்பாலைப் பெண்பாலாக்கிக்  கொள்ள வேண்டும்!)

சுதந்திரம் என்ற பெயரில் - உரிமை என்ற பெயரில் - கவர்ச்சிக்கும் - உணர்ச்சிக்கும் இலக்காகி - விரைவிலேயே எழிலையும் - இயல்பையும் - ஆரோக்கியத்தையும் - இணக்கத்தையும் இழந்து - வீழ்ந்துபோகின்ற   பெண்கள்  - வீட்டிற்கும் சமுதாயத்திற்கும் பெருத்த நஷ்டத்தை ஏற்படுத்துவார்கள்!! 

     

 படத்திற்கு நன்றி manisenthil.com 






இந்நிலை மாற வேணும் - நம் பெண்கள் தேற வேணும்!! 

பெண்கள் மனிதகுலத்தின் ஆணிவேர்கள் - இந்த வேர்கள் பலவீனப்படுவது - கூடாது -

பெண்களின்  நல வாழ்வின் பால்
நம் கரிசனமும் - கவனமும - வளரவேண்டும்!!  

Thursday, November 17, 2011

ஷிப்பான் சேலையில் பேரழகி: புகைப்படம்




www.courant.nyu.edu



நீங்கள் பார்ப்பது  -
ஷிப்பான் சேலையைப் போர்த்திப்  பறக்கவிட்டபடி முகம் மறைத்து, ஒயிலாக அமர்ந்திருக்கிற விளம்பரப் பேரழகி அல்ல!!
இது ஒரு புகைப் படம்!!
புகைப்  படம் என்றுமொட்டையாகச் சொன்னால் என்று கேட்கிறீர்களா?
இது உண்மையான புகைப் படம் அதாவது புகையின் படம்   

Wednesday, November 16, 2011

இப்படத்தில் எத்தனை அம்புக்குறிகள் உள்ளன? எண்ணுங்கள் பார்க்கலாம்!

இப்படத்தில் எத்தனை அம்புக்குறிகள் உள்ளன? எண்ணுங்கள் பார்க்கலாம்!


பச்சைக் குத்திக் கொள்ளும்  பிரபல டிசைன்களில் இதுவும் ஒன்று.
படத்திற்கு  நன்றி: tribalshapes.com

Tuesday, November 15, 2011

விண்ணைப் பிளக்கும் பிள்ளையின் கதறல்!! - தீயின் - தீமையின் பயங்கரம்

விண்ணைப்  பிளக்கும் பிள்ளையின் கதறல்!!--தீயின் - தீமையின் பயங்கரம்

படத்திற்கு நன்றி: fearnet.com

.  

பயங்கர வாதம்!! அஞ்சா நெஞ்சம் கலங்கிய தருணம்!!


பயங்கர வாதம்!!  அஞ்சா நெஞ்சம் கலங்கிய தருணம்!!

படத்திற்கு நன்றி: conradaskland.com

கழுதைமேல் ஊர்வலம் போன நெப்போலியன்!! !


கழுதைமேல் ஊர்வலம் போன நெப்போலியன்!!

தோல்வியைத் தழுவியதற்குத் தண்டனையாக கழுதை மேல ஏற்றப் பட்டு நாடு கடத்தப்படும் நெப்போலியன்!! (படத்திற்கு நன்றி: en.wikipedia.org)

பழங்காலத்தில், நம்மூரிலும்,  தவறு செய்பவர்களை - கரும்புள்ளி - செம்புள்ளி குத்தி - கழுதை மேல்  ஏற்றி ஊர்வலம் அனுப்புவார்களாம்!! - சொல்லக் கேள்வி

மேளம் கொட்டி நையாண்டி செய்து  நெப்போலியனைத் துரத்துகிறார்கள் - என்று  இப்படம் காட்டுகிறது  அவமானத்தால் - நெப்போலியன் தலைகுனிந்தபடி அம்ர்ந்திருப்பதையும்  --,   காணுங்கள்!!

அது சரி!! இவ்வாறான சவாரிகளில் - எதிர்த் திசையில்தான் ஆள் அமரவேண்டுமோ?    என்ன ஏற்பாடடா சாமி!!

ஆனைமேல் அம்பாரி - குதிரைமேல் ஒய்யாரம்  என்ற கதையாய் பவனி வந்த உலக மாவீரனுகே  இந்தக்  கதியென்றால் --அதிகாரம் - பதவி - அந்தஸ்து  இவற்றிற்கு -எத்தனை அற்ப ஆயுள் என்பது விளங்குகின்றதல்லவா?

நம் நாட்டின் இன்றைய  அரசியல்வாதிகளின் நிலையைக் கொஞ்சம் இங்கே ஒப்பீடு செய்து பார்க்கத் தோன்றுகிறது.

பதவியில் தூக்கி வைப்பவர்களே - பதவியிலிருந்து தூக்கி எறியவும் துணிவார்கள்  என்பதைச் சொல்லவும் வேண்டுமோ? 

அண்டப் பிரசவம்! அண்டப் பிரவேசம்!!

அண்டப் பிரசவம்! அண்டப் பிரவேசம்!! 

மனிதன் ஆப்ரிக்காவில் தோன்றி உலகெங்கும் பரவினான்!! 
வரலாறு - அறிவியல் - இலக்கியம் - இவை மூன்றும் ஒருசேர உரைக்கும் முக்கால உண்மை!!

படத்திற்கு நன்றி: goodreads.com